நிலவோடு உறவாடு 1.0
நிலவோடு உறவாடு 1.0
விண் நிலாவைக் காட்டினாள் அன்னை.
அவ்வெண் நிலவைக் கண்டு வியந்தச் சுட்டியின்
பிளந்த
வாயில்
அன்னத்தை ஊட்டினாள் அவள்.
கவளம் ஒவ்வொன்றிலும் நிலா, என் நிலா!
நிலாச் சோறுண்டுக் காளையான அவன்
காதலில் கட்டுண்டு வெதும்பினான்.
புதுக் கவிஞனாகி அவன் புனைந்த
காதல்
கவிதைகளில் எல்லாம் நிலா, என் நிலா!
கோபத்தைத் தணிக்க ஒரு குளிர் நிலா.
சோகத்துற்குத் தோள்தருமொரு மென் நிலா.
புதுத் தம்பதியர் போவதோத் தேன் நிலா.
தியானத்துக்கு ஒரு முழு நிலா, நிலா, என் நிலா!
நிலவைப் பாடாதக் கவிஞனும் உண்டோ!
'நிலா' என ஒப்பிடப்படாதப் பெண்தான் உண்டோ!
கவியின் பிழைப்பைக் காத்த நிலா!
காவியக் களஞ்சியம் மொத்தவும் நிலா, என் நிலா!
'நிலா, நிலா, ஓடி, வா' எனக் கவிஞன் பாடினாலும்
நிலாவிற்கு விஞ்ஞானமே வழியென்றது மெஞ்ஞானம்.
ஆக, புறப்பட்டான்
சந்திரயான், அக்னிபிழம்பத்தோடு.
அதிவிரைவில் சந்திப்போம், நிலா, என்
நிலாவை!
ஆகஸ்ட்23, 'கண்டேன், நிலாவை' என்ற நற்செய்தி வரும்!
அது
என்
உள்அனுமனின் அனுமானம் ஆகும்.
நற்கவி
வாக்கு
பொய்க்காது - தயாராகுங்கள்,
நிலவோடு உறவாடும் நேரமிது, நிலா, ஆம், நம்
நிலாவோடு!
- ரா கி (ராதாகிருஷ்ணன்)
15 July 2023
Super Raki. Timely thought on the Nila. The new moon, the full moon, the crescents, the super moon, the blue moon .... and of course honey moon, carry a distinct memory threads in the minds of the earth's humanity of all ages. Most nostalgic thoughts are triggered by moon. Poets and lyricists haunt the moon with their verses.
ReplyDeleteChandrayan-3 ... succeed fully and tell us if the moon up close is as beautiful as we see from here. It is time a young generation taste the honey on our real Moon! Nila, my Nila!
Excellent thoughts, Radha. Well expressed. Took us right into the lunar orbit!
Thank you Easwaran!
DeleteTheinthu marainthalum meendum varuven En peyar NILA
ReplyDeleteThank you Angu!
DeleteUngal kavithai nilavai pol jolikiradu, minukiradu.
ReplyDeleteThank you Gopiji(?)
DeleteRaKi, Your poems /comments are always set in the contemporary milieu. This is no exception. You have covered from simple to the sublime aspects of the moon & established the connection of the moon to the ordinary man, to science and the spiritual realm.
ReplyDeleteராதா
ReplyDeleteஅருமையான நிலாக்கவிதை…
நிலவுக்கு அருகாமையிலேயே கொண்டு சென்று விட்டாய்…
உன் பணி வாழ்க…
நிலாவைப் போற்றி எத்தனை பாடல்கள்…
அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்…
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்…
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா…
நிலா அது வானத்து மேலே…
வெண்ணிலவே, வெண்ணிலவே…
வாராயோ வெண்ணிலாவே…
நிலாவே வா…செல்லாதே வா…
இளய நிலா பொழிகிறது…
இன்னும் எத்தனையோ…
நிலவுக்கு மட்டும் ஏன் இத்தனை உயர்ந்த இடம்…ஏன் இத்தனை போற்றுதல்கள்…உண்மையிலேயே நிலா அத்தனை அழகா…
இத்தனை கேள்விகளுக்கும் ஆகஸ்ட் 23 விடை கிடைக்குமா…சந்திராயன் 3 விளக்கம் தருமா…
ராதா…ஆகஸ்ட் 24ம் தேதி உன் கவிதை மூலம் பதில் சொல்வாயா....காத்திருக்கிறேன்…
அருமை ராகி.
ReplyDeleteநிலாச்சோறு முதல் சந்திராயன் வரை ஒரே கவிதையில்
- இளங்கோவன்