அரிதிலும் அரிது!
விழுந்த விதைகள் எல்லாம் துளிர் விடுவதில்லை. எழுந்த துளிர்கள் எல்லாம் செடி ஆவதில்லை. நிமிர்ந்த செடிகள் எல்லாம் மரமாவது இல்லை. வளர்ந்த மரங்கள் எல்லாம் பூப்பதில்லை. பூத்த பூக்கள் எல்லாம் நற்கனி ஆவதில்லை. கனிந்த கனிகள் எல்லாம் நல்விதை ஆவதில்லை. விதைகள் எல்லாம் மண்ணுள் விழுவதில்லை. இதை எல்லாம் கடந்து உயிர்க்கும் உயிர் அரிதிலும் அரிது. - ரா கி (ராதாகிருஷ்ணன்) 10 Feb 2024