மரணத்தின் விளிம்பில் !
மரணத்தின் விளிம்பில் ! காற்றின் வீச்சில் என் மூச்சு உயிர் பெற்றது. பயிரின் அறுப்பில் என் பசி ஆறியது. காய் கனியின் நறுக்கலில் என் உடல் ஊட்டம் பெற்றது. மிருகயினத்தின் அற்பாயுசில் என் புரதம் செருக்கெறியது. நதியோட்டதின் தடையால் என் தாகம் தணிந்தது. காபி விதையின் வறுத்தலில் என் பானம் சுவையானது. பூப் பறிப்பில் எனக்கு நறுமணம் கிட்டியது. பருத்தி , நார் , முறுக்கலில் என் உடை உருவானது. பழரச ப் பிழியலில் என் போதைக்கு ப் போதை ஏறியது. தாது த் தோண்டலில் என் உபகரணங்கள் உற்பத்தியானது. தேக்கின் முறிவில் என் கட்டில் உண்டானது. ரப்பர் மரத்தின் அழுகையில் என் வண்டிச்சக்கரம் லகுவானது. பச்சிலையின் கசக்கலில் என் உடல் குணமானது. இன்னும் பற்பல பெற்றேன் புவிச் செல்வ ச் சகாக்களை துன்புறுத்தி ! ஆனால் நான் கொண்டு வந்தது என்ன ? திரும்ப க் கொடுத்தது தான் என்ன ? மரணத்தின் விளிம்பில் விடைகளைத் தேடுகிறேன். பெற...