பெரு நகரம், பெரு மூச்சு!
பெரு நகரம், பெரு மூச்சு! தே டி வந்தடைந்த என்னை, பாடாய்ப் படுத்துது சென்னை. கால நேரம் அறியாமல் ஓலாவில் உலா வந்தேன் நானே. வேலை முடிந்த வேளை, பிதுங்கி வழிந்ததுச் சாலை. நேரம் போகப் போக, நெரிசல் கூடி கூடிப் போக, சாலையில் குவிந்த வண்டிகள், சாரைச் சாரையாய் ஊர்ந்தன. பெருமைக்குரியப் பெருநகரம், பெருநரகம் ஆனது இப்போ. அவசர கதியில் எல்லோரும். அவரவர் இலக்கு அவரவர்க்கு. ஒவ்வொரு அங்குல வெற்றிக்கு, ஒட்டி, வெட்டி, உரசி ஓட்டினர். அக்கம் பக்கம் உள்ளோர் அனைவரும் எதிரியானார்களே. ஆயிரம் போர்முனைகள் உருவானதே! உச்ச நேர நெரிசலில் மூச்சு திணறியதுச் சாலையே! வழித்தடம் இன்றி தடுமாறி விழி பிதுங்காமல் இருக்க வழி என்ன என்றெண்ணும்போது விழிப்பு வந்தது அங்கே! அ ம்புலன்ஸ் வண்டி ஒன்று, அவசர ஒளி/லி ஒளி/லிக்க, அதனுள்ளே ஒரு உயிர் துடி துடிக்க, கண் இமைக்கும் நொடியில், வண்டிகள் அனைத்தும் ஒருசேர, போர் நிறுத்தம் ஒலிக்காமல் ஒலித்து, ஓர்ஒரமாக இல்லாதயிடம் கண்டு ஒதுங்க எம் வாசுதேவருக்கு வழி விட்ட யமுனையை போல் வழி ஒன்று கிட்ட...