அனிதா கொடுத்த பல்பு
அனிதா கொடுத்த பல்பு ப ல்பு என்பது ஒரு தமிழ் வார்த்தையா ? ‘ சந்தேகமே வேண்டாம் ’, என நாங்கள் அடித்துச் சொல்வோம் . இந்த வீச்சிலிருந்து விலகி நின்றால் நீங்கள் ஒரு ' பெருசு ', என்பது தெள்ளத் தெளிவு . பல்பு பத்தி இப்போ என்ன பேச்சு ? நேத்து, எங்க வங்கியிலே, என் சகா அருண் பல்பு வாங்கி ரொம்ப நொந்து போயிருந்தான். அருணும் நானும் சென்னைலே ஒரே வங்கியிலே தலைமை அலுவலகத்தில் நிதி ( பைனான்ஸ் ) இலாகாவில் வேலை செய்கிறோம். ஈ சி ஆர் ரோடு பாலவாக்கம் பேச்சிலர் விடுதியில் ரூம் மேட் கூட. அருண் சொந்த ஊர் ஈரோடு. சதானந்தன் ஆன எனக்கு கோவை. சுரேஷ் போல அருண் எனக்கு நெருங்கிய நண்பன் . சுரேஷை பற்றி பின்னர். உணவு இடைவேளை போது கேட்டேன் , " ஏன்டா இப்பிடி ?" "ஆபீசிலே பெரிய பல்பு வாங்கிட்டேன் ப்ரோ!" "என்னாச்சு ?" "ரேகன்சிலியஸன் ப்ரோஸஸ்லே புதுசா பண்ணி பேரு எடுக்கலாம்னு நெனச்சு ..சொதப்பிட்டேன். 30 , 40 என்ட்ரிஸ் ரிஒர்க் .. டீம்லே எல்லோருக்கும் ரிஒர்க். ச்சே புத்திசாலித்தனமா செய்யறதா நெனெச்சு இப்பிடி பல்பு வாங்கிட்டேன்" என்று புலம்பினான் அருண். அருண் பு...