இதுதாண்டா உன் மரண தேதி!
"இதுதாண்டா உன் மரண தேதி!" " ந ல்லா கேட்டுக்கோ , நடேசா , இதுதான் உன் மரண தேதி …” நடேசன் கெஞ்சக் கெஞ்ச , அந்த கெஞ்சல்களை க் கொஞ்சமும் கேளாமல் , அதிகார த் தொனியில் , மரண தேதியை அறிவித்து விட்டார் , ' அவர் '. " இருபத்தி ஏழாம் தேதி , மே மாதம் , இரண்டாயிரத்து ......". நடேசனுக்கு மூச்சு இரைத்தது . சரக்கென்று க் கண்களை திறந்தான். வரவேற்பு அறை சோபாவில் உட்கார்ந்து இருந்தான். நடேசன் வழக்கமாக வேலை நாட்களில் காலை 6:30 மணிக்கு எழுந்திருப்பான். இன்றோ அதிகாலை 4 மணிக்கே த் தூக்கம் கலைந்தது . காலைக்கடன் முடித்துவிட்டு வரவேற்பு அறை சோபாவில் உட்கார்ந்த ஞாபகம். களைப்பில் சோபாவில் உட்கார்ந்த படியே தூங்கிவிட்டோமோ என் நடேசனுக்கு தோன்றியது. ஆகவே இந்த ‘ மரண தேதி நிகழ்வுவை ’ கனவு என்று வகைப்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை மேலும் நடேசனுக்கு , வழக்கமான கனவுகள் , மேகங்கள் மேல் நடப்பது போல் , பஞ்சு போல , திடத்தன்மை இல்லாதவைகளாக இருக்கும். ஆனால் இன்றைய இந்த ‘...