Posts

Showing posts from July, 2023

நிலவோடு உறவாடு 1.0

Image
நிலவோடு உறவாடு 1.0   விண் நிலாவை க்  காட்டினாள் அன்னை . அவ்வெண் நிலவை க்  கண்டு வியந்த ச்  சுட்டியின்   பிளந்த வாயில் அன்னத்தை ஊட்டினாள் அவள் . கவளம் ஒவ்வொன்றிலும் நிலா , என் நிலா ! Picture courtesy: Farmers Almanac நிலா ச்  சோறுண்டு க் காளையான அவன்   காதலில் கட்டுண்டு வெதும்பினான் . புது க் கவிஞனாகி அவன் புனைந்த காதல் கவிதைகளில் எல்லாம் நிலா , என் நிலா !   கோபத்தை த்  தணிக்க ஒரு குளிர் நிலா . சோகத்துற்கு த்  தோள்தருமொரு   மென் நிலா . புது த்  தம்பதியர் போவதோ த்  தேன் நிலா . தியானத்துக்கு ஒரு முழு நிலா , நிலா , என் நிலா !     நிலவை ப்  பாடாத க்  கவிஞனும் உண்டோ ! ' நிலா ' என   ஒப்பிடப்படாத ப்  பெண் தான் உண்டோ ! கவியின் பிழைப்பை க் காத்த நிலா ! காவிய க்  களஞ்சியம் மொத்தவும் நிலா , என் நிலா !   ' நிலா , நிலா , ஓடி , வா ' என க் கவிஞன் பாடினாலும்    நிலாவிற்கு விஞ்ஞானமே வழியென்றது மெஞ்ஞானம் . ...