வெள்ளைக்காரனுக்கே வெள்ளை அடிப்போம்
வெள்ளைக்காரனுக்கே வெள்ளை அடிப்போம் “ ச ண்டையினா சட்டை கிழியத்தானே செய்யும் ” என்பது போல , நாம் ஸ்மார்ட் போனில் தட்டச்சு (typing) செய்யும் போது, எழுத்துப்பிழை , ஏற்பட வாய்ப்புகள் நிறைய உண்டு . அப்படி ஏதாவது பிழை ஏற்பட்டால் , ஸ்மார்ட் போன் தானாகவே ( சமயங்களில் முந்திரி கொட்டையை போல ) சில சொற்களை பரிந்துரை செய்வதை கவனித்திருப்பீர்கள் - அவற்றில் நமக்கு வேண்டிய பரிந்துரையை தேர்ந்து எடுப்போம். இதை ஆங்கிலத்தில் autocorrection என சொல்வார்கள். இந்த வசதி நாம் தட்டச்சு செய்யும் எல்லா மின்னணு சாதனங்களிலும் உள்ள மென்பொருளின் அங்கம். சுருங்கச் சொன்னால் , இந்த ' தான்திருத்தி ' ( autocorrection க்கு அடியேனின் தமிழாக்கம் ) எடுத்ததற்கு எல்லாம் குத்தம் சொல்லும் நம் ஸ்கூல் கனகா டீச்சர் போன்றது! இந்த பரிந்துரைகளை சற்று உன்னிப்பாக பாருங்கள் ; அது ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கு நெருங்கிய சொற்களை பரிந்துரைக்கும். இந்த ' தான்திருத்தி ’ யை (autocorrection யை ) ஏதோ தகவல் தொழில்நுட்ப யுகத்தின் கண்டுபிடிப்பு என சொல்வார்கள். இல்லவே இல்லை! பன...