நீங்க என்னத்த கிழிச்சீங்க?
நீங்க என்னத்த கி ழி ச்சீங்கன்னு மாரிமுத்துவுக்குத் தெரியும் ' இ ந்த வருடம் யார் யார் தலைகள் உருளப் போகுதோ! ' என்ற எண்ணம் என் மனதில் சலனித்தது. ராமநாதனாகிய எனக்கு துபாயில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. என்ன வேலை என தெரிந்து கொள்வதற்கு முன் என் உயர் அதிகாரி யார் என தெரிந்து கொள்வது உசிதம். இந்த நிறுவனத்தின் எல்லாம் வல்ல , வெள்ளைக்கார தலைமை நிதி அதிகாரி (CFO) , டேவிட் ஹல் தான் என் உயர் அதிகாரி. ஸ்ட்ராட்டஜிக் திட்டத்துக்கு இந்த நிறுவனத்தில் தனியாக துறையோ ஆளோ இல்லை. டேவிட் தான் இந்த பொறுப்பையும் கவனிக்கிறார். டேவிட்டின் எல்லா மேலாண்மை பொறுப்புகளுக்கும் , எம்பிஏ படித்த நான் தான் உதவியாளர். குறிப்பாக நிதி துறை அறிக்கைகள் மற்றும் ஸ்ட்ராட்டஜிக் திட்டங்கள் , டேவிட்டின் வழிகாட்டுதலுடன் , தயாரிப்பது என் பொறுப்புகளில் அடங்கும். சுருக்கமாக , நான் டேவிட் ஹல்லின் நிர்வாக உதவியாளர் ( Executive Assistant) - தற்போது வரை. அ ன்று நான் அலுவலகத்தில் தனியாக இருந்தேன். நேரம் மாலை 7:30 மணியை கடந்துவிட்டது. அலுவலகம் நேரம் மாலை 5:00 மணிக...