படம் எடுத்தப் பாடம் !

படம் எடுத்தப் பாடம் !

வேளச்சேரி வட்டம் 

வெள்ளக்காடு ஆச்சு ! 

அடையாறுப் பகுதியோ 

அடைமழையில் மூழ்கியாச்சு !

கொளத்தூர் வீதியெல்லாம் 

குளம், குளமாச்சு !  

மடிப்பாக்கம் மக்கள் 

மாடி ஏறியாச்சு ! 

சென்னை வெள்ளப் பெருக்கு

மீண்டும் தலைப்பாச்சு !  


ஈரமாக வந்தத் தினத்தந்தியை,

ஓரமாகப் பிரித்தேன். 

தந்தியெங்கும் புகைப்படங்கள் - 

'முந்திக் குதித்தத் தலைவர்கள்,

சந்து புந்து எங்கும் 

இந்த வெள்ளப் பணியின்

அதிஅவசர மேற்பார்வையில்!'

எக்கச்சக்கப் படங்கள் எடுத்தது,

பக்கம்பக்கமாகப் பாடம்,

உழைப்பைப் பற்றி, ஆம், 

கடும் உழைப்பைப் பற்றி!


கூர்ந்துப் பார்த்த நான், 

அசந்துதான் போனேன் ! 

அசாத்திய உழைப்பு இது.

அசுத்த வெள்ளக் கழிவு நீரில்

மொத்தெனக் குதித்து நின்று,

முழங்கால் வரை மூழ்கி, 

முழுமூச்சாகக் கடமையை 

முழுமையாக ஆற்றியிருந்தனர்,

கூப்பிடக்குரலுக்கு ஓடோடி வந்த 

இப்புகைப்படக் கலைஞர்கள்!


-ரா கி (ராதாகிருஷ்ணன்)

30 அக்டோபர் 2025

Comments

  1. Super your talent shining with every

    ReplyDelete
  2. நிஜமாகவே சுருக் தான்.மிக அருமை

    ReplyDelete
  3. அருமை

    ReplyDelete
  4. பிணத்திலும் பணம் பார்க்கும் மாக்கள் இருக்கும் வரை விடிவேது நமக்கு.

    ReplyDelete
  5. As usual, very good last line. But then who bothers about the photographers and other support staff

    ReplyDelete
  6. ஆம் அசாத்திய உழைப்பு! உழைத்துக்களைத்த அவ்வொரு புகைப்பட கலைஞர், இந்த பக்கம் என்ற குரல் கேட்டு திரும்பிய போது, தண்ணீரில் திளைத்த மனிதர் மஞ்சள் பற்களை காட்டி எலிக்காய்ச்சலுக்கு மருந்துக்கு அலையும் “என்னையும்” என்றார்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சேரும் சேறு !

மரணத்தின் விளிம்பில் !