மென்பொருள் வேந்தனும் 'கோட்டையும்'
மென்பொருள் வேந்தனும் 'கோட்டையும்' மென்பொருள் கோட்டை சின்னஞ்சிறிய செவ்வக மின்திரையில் , தன் விரல் நுனியின் தட்டச்சில் , மென்பொருட்களின் சாகசத்தில் , அண்டசராசரத்தையே அடக்கி ஆண்டாற்போல் அந்த இறுமாப்பு , அம்மென்பொருள் வேந்தனின் முகமெங்கும்! கோட்டைவிட்ட போது... அந்தோ ..! கண்ணிமைக்கும் நேரத்திலே கணனிக்குள் ஊடுருவிய கிருமி அனைத்து கோப்புகளையும் அழித்தப்போ , அவனுக்கு கொள்ளவில்லை இருப்பு , அரங்கேறியது பெரும் தவிப்பு , வந்ததேறியது கடும் கடுப்பு! கோட்டை போடு ! ஆதலினால் ... அத்தியாவசியம் இங்கே கிருமி தடுப்பு- ஒத்தையாக அல்ல , இரட்டிப்பாக! அக்கணனிக்கும் , மற்றும் இவன் அகந்தைக்கும் ! - ரா கி (ராதா கிருஷ்ணன்) 26 March 2023