கோடை மயில் தோகையை விரித்தாள்!
சுட்டெரிக்குதுக் கோடை வெ ப்ப ம் . பட்டெனத் தெறிக்குது வெப்பமானி. கொட்டோக் கொட்டெனக் கொட்டுது வியர்வை, தொட்டதெல்லாம் சுட்டோச் சுடுவென சுடுது, தட்டுத் தடுமாறுது நம் சென்னை. விட்டுவிட்டு ஓடச்சொல்லுது உ/என்னை! ஆனால் கடும் கோடையைக் கண்ட உடனே, படுக்கொண்டாட்டம் தான் உனக்கு. மட மடவென இலைகளை உதிர்த்தாய். படபடவெனப் பொன் தோகையை விரித்தாய். வியர்த்து வழியும் எம்மைக் கலாய்க்க, பூத்துக் குலுங்கினாய் சரக் கொன்றையே! - ராகி (ராதாகிருஷ்ணன்) 10 April 2024