Posts

Showing posts from July, 2024

ஆட்டநாயகன்

Image
ஆதியும் காணோம் , அந்தமும் இல்லை ! அலைப் பாயும் , ஆழமோ , அதல பாதாளம் ! பரவலோ எங்கெங்கும் , பார்வையோ அண்டமெங்கும் ! மருவும் , மறையும் , உருவமும் அற்றது!   தட்டிக் கொடுக்கும் , தட்டியும் விடும் ! ஆட வைக்கும் , ஆட்டு விக்கும் !   உடைந்துப் போகும் , கடந்துப் போகாது ! சீண்டிப் பார்க்கும், நோண்டி எடுக்கும்! தேடி அலையும் , ஓடி ஒழியும் ! சிறையும் படாது , கரையும் ஏறாது !   அப்படியென்ன ,   இப்படியென்ன , அப்பப்பா , எப்படியெல்லாம் , திக்குமுக்காட வைக்குதே , சிக்குப்பிடித்த   எம்மனம் ! - ரா கி (ராதாகிருஷ்ணன்) 26 ஜூலை 2024 Picture Courtesy: Maria Corte    https://www.scientificamerican.com/article/mind-from-matter/