Posts

படம் எடுத்தப் பாடம் !

Image
படம் எடுத்தப் பாடம் ! வேளச்சேரி வட்டம்  வெள்ளக்காடு ஆச்சு !  அடையாறுப் பகுதியோ  அடைமழையில் மூழ்கியாச்சு ! கொளத்தூர் வீதியெல்லாம்  குளம், குளமாச்சு !   மடிப்பாக்கம் மக்கள்  மாடி ஏறியாச்சு !  சென்னை வெள்ளப் பெருக்கு மீண்டும் தலைப்பாச்சு !   ஈரமாக வந்தத் தினத்தந்தியை, ஓரமாகப் பிரித்தேன்.  தந்தியெங்கும் புகைப்படங்கள் -  'முந்திக் குதித்தத் தலைவர்கள், சந்து புந்து எங்கும்  இந்த வெள்ளப் பணியின் அதிஅவசர மேற்பார்வையில்!' எக்கச்சக்கப் படங்கள் எடுத்தது, பக்கம்பக்கமாகப் பாடம், உழைப்பைப் பற்றி, ஆம்,  கடும் உழைப்பைப் பற்றி! கூர்ந்துப் பார்த்த நான்,  அசந்துதான் போனேன் !  அசாத்திய உழைப்பு இது. அசுத்த வெள்ளக் கழிவு நீரில் மொத்தெனக் குதித்து நின்று, முழங்கால் வரை மூழ்கி,  முழுமூச்சாகக் கடமையை  முழுமையாக ஆற்றியிருந்தனர், கூப்பிடக்குரலுக்கு ஓடோடி வந்த  இப்புகைப்படக் கலைஞர்கள்! -ரா கி (ராதாகிருஷ்ணன்) 30 அக்டோபர் 2025

சேரும் சேறு !

Image
  சேரும் சேறு ! ஆற்றிலிருந்துத் தோண்டி எடுத்தச்   சேற்றுக் களிமண் கவளத்தைப்   பற்றுடன் கையால் உருட்டிப் பற்றிப் பிடித்தோம் ஆனைமுகனை ! போற்றிப் பாடி, வணங்கினோம் ! சாற்றினோம், அவன் நற்பெயரை !  ஏற்றினோம் நல் தீபத்தை !   நற் பண்டங்களைப் படைத்தோம்; உற்றாருடன் பகிர்ந்தோம், வயிறார உண்டுக் கழித்தோம் ! உற்ற நன்னாளில் நம் கணபதியை, அவ்வாற்றுக்கே எடுத்துச் சென்று, நட்டாற்றில் கரைத்தப் போது,  சற்றே மனதில் ரீங்காரித்தது,    மாற்றே இல்லாத அந்த நியதி:   'நம் சேறும், வந்த வழியேச் சேரும் !' -ரா கி (ராதாகிருஷ்ணன்) 31 Aug 2025

(சு)தந்திர வெறியர் !

Image
  ( சு)தந்திர வெறியர் ! ' பத்தாயிரம் நாய்கடி , தினசரி ! ' ' இருபதாயிரம் மரணம் , ஆண்டுக்கு ! ' ' அவதிப்படுவோர் பலர் , முதியோரும் சிறார்களும் ! ' " தூக்கிவாரிப் போடுதுப் புள்ளி விவரம் , தூக்கிப் போடு நாய்களை காப்பகத்தில்!" உச்ச நீதி மன்றம் அளித்தது , உச்சகதியில் உத்தரவு! ஆனால்.... நாய்யின சுதந்திரத்தை நாம் பறிக்கக் கூடாது என நாடெல்லாம் கூட்டம் கூடி , நாய் ஆர்வலர்கள் போராட்டம் ! அவ்வார்வளர் ஒருவரை ஆவலுடன் பேட்டிக் கண்டோம். " என் குழந்தைகளுக்கு உள்ள எல்லாச் சுதந்திரமும் , என் செல்ல டாமிக்கும் என் வீட்டில் உண்டு!" எனப் பெருமிதத்துடன் என்னிடம் கூறினார். " குரலாற்ற ஜீவன்களுக்காகக்  குரல் கொடுப்போம் ," " நாய்யின சுதந்திரம் காப்போம்!" " செய்வோம் இனிப் புரட்சி!" கண்கள் செக்கச் சிவக்க கணீர்ரெனக் குரல் கொடுத்தார்! இச்சுதந்திர வெறியரின் அசரா அசுரமனம் கண்டு அசந்து விழுந்த நான் எழுந்துக் கேட்டேன்:  " டாமிக்கு ஒரு ஜோடி வேண்டாமா ?" " அதுக்குக் குட்...

காப்பகம்

Image
காப்பகம் ' திரு வீதிகளில் உலா வரும் தெரு நாய்களை எல்லாம் அரசுக் காப்பகங்களில் அவசரமாக அடைக்க வேண்டும் ' உச்ச நீதி மன்றம் உச்சகதியில் உத்தரவு ! ‘ நாய்களைக் கூண்டில் அடைப்பதா ? அவைகளின் சுதந்திரத்தைப் பறிப்பதா ?’ நாய் பிரியர்கள் ஆவேசம்! நாடெங்கும் போராட்டம் வெடித்தது  ! நம் நாய் பிரியரும் தம்மென குதித்தார் அதில்  ! " என் பரந்த பங்களாவின் உள் என் மனைவி மக்கள் தவிர எங்கள் செல்ல டாமிக்கும்    தங்கும் வசதி உண்டு! என் படுக்கை வரை அவனு க் குச் சுதந்திரம் உண்டு !" பெருமிதத்துபிடன் அவர் சொன்னது , இதமா இருந்ததுக் கேட்பதற்கு. மனம் விட்டுப் பாராட்டினேன் , " அண்ணே , மிகச் சிறப்பு! என்னே உங்கள் பரந்த மனம்!" சும்மா இருக்காமல் அடுத்து " அம்மா , அப்பா எங்கே .. ?" என சட்டெனக் கேட்ட எனக்கு , பட்டென வந்தது பதில்: " முதியோர் காப்பகத்தில்!"   - ரா கி (ராதாகிருஷ்ணன்) 12 August 2025

ஒரு மகா நடிகன்!

Image
ஒரு மகா நடிகன்! தொல்லைத் தரும் வாரிசு அரசியலை எதிர்த்து த்   தொலைக்காட்சிப்  பெட்டியை உடைத்தாய்!  அப்பெட்டிக்  குப்பைக்கூடையை அடையும்முன்  பெட்டிப் பாம்பாய் அடங்கினாய்! அரசியல் ஒரு நாற்றம் பிடித்தச் சாக்கடை அவசியம் அதைச் சுத்தம் செய்வேன் என   வாக்கு ஒன்று அளித்தாய் - அந்தோ  அச்சாக்கடையிலேயே சங்கமம் ஆனாய்!  மாற்று அரசியல் தருவேன் என்றாய்.  ஏமாற்று வேலையைத் தான் புரிந்தாய்! ஒப்பற்ற நடிகனென பெயர் எடுத்தாய்;  ஒப்புக்கொள்கிறோம், நீ ஒரு மகா நடிகனே! -ரா கி (ராதாகிருஷ்ணன்)   30 May 2025

கொலவெறி !

Image
  1.    கொலவெறி  ! ஓடும் ரயில் முன் செல்பி எடுத்தவனை எக்ஸ்ரே எடுக்கிறார்கள்  இப்போ  ! 2.    விரய நீதி நீதி அரசரின் பேராசை   - அரசர் ஆக. ஆக ,  நீதி ஒழியட்டும் !   3.    வியர்ப்பு வியர்க்க  உழைத்தவன் , வியக்க  உயர்ந்தான்  !   4.    வாக்கிங் உழைக்காமல்  உண்டுக் கொழுத்தவன் , உழைத்தான்,  உடல்  இளைக்க  ! 5.    கோடிடு அந்தக் கோடி வீடு நீதியரசர் வீடு. கிட்டியது அங்கே கோடானுக் கோடி. கோடிடா வாழ்வு கேடுத் தருமாம்  - தருமா ,  தருமா  ?   6.    கல் நெஞ்சக்காரி எறும்பூறக் கல் தேயுமாம். ஊறுகிறேன் ,  நான் ஊறுகிறேன் , ஊறிக்கொண்டே இருக்கிறேன் . 7.    பூ சிறுபொழுதே வாழ்ந்தாய் . நறுமணம் தந்து மாய்ந்தாய்  ! மணம் மாறுவேனோ நான்  ? 8.    பறக்கும் கனவு ஊறும் கம்பளிப்பூச்சி உருமாறும் வண்ணத்துப்பூச்சியாய்! பறக்கும் கனவு நனவாக , கர்ப்பகாலம் தான் கழியட்டுமே ! 9.    ஆனந்தம் ஆனந்தப் பவனில் . பாய்ந்ததுக் கூட்டம்  ! மு...

நினைவிலைகள்

Image
தூண்டியது ஒரு நினைவலை. சீண்டிப் பார்த்தது மனம். தாண்டியக் கதவிலோ மறதி. தோண்டியப் போது அசதி. மீண்டதுப்   பாதியிலும் பாதி. கண்டதோ நினைவழிவின் துவக்கம் . Picture courtesy statement is given below  சீட்டில் எழுதி ப்  பத்திரபடுத்தியும் , அச்சீட்டு வைத்த இடம் மறந்ததென்ன ! வீட்டைப் பூட்டி இழுத்து இழுத்துப் பார்த்தும் எட்டடியில் ஐயத்துடன் திரும்பியதென்ன ! எட்டிநடையுடன் கடைவீதிக்கு வந்துவிட்டு    எடுத்துவராத வண்டியைத் தேடுவதென்ன !   கண்டப் பழம்பெரும் நண்பனின் கொண்டப் பெயர் பிடிபடாததென்ன ! உண்டபின் உட்கொண்ட   மாத்திரையை மீண்டும் எடுக்க முனைவதென்ன ! மூக்குக்கண்ணாடியை த்  தலைமேல் தள்ளிவிட்டு மூலை முடுக்குகெங்கும் துருவுவதென்ன !   பசுமை நிறைந்த நினைவு அலைகளும் , சுமை ஏற்றும் நினைவுச் சூறாவளிகளும் , காலத்தின் கட்டாயமாக ஒருமி த் ததென்ன ! காலங்கள் காட்சிகள் மாறியதென்ன !   விலைத்தந்து த்  தக்கவைக்க முடியுமா என்ன இலையுதிரில் உதிரும் இந்நினைவு   இலைகளை ? - ராகி (ராதாகிருஷ்ணன்) 7 ஆகஸ்ட் 2024 ...