Posts

Showing posts from October, 2023

தர்மமண் தழைக்கட்டும்!

Image
கருங்காகத்திற்கு ஒரு பிடி ச்  சோறு.  கட்டெறும்புக்கு ஒரு மாக்கோலம். குண்டுகணேசனுக்கு பெரும் கவளம் - தெப்பக் குளத்து மீனுக்கும் பொரி தீனி. நந்திக்கு முந்தி ஓரு இடம். நாகத்திற்க்கு கழுத்திலொரு இடம், நம்பசுவுக்கோ கோமாதா பட்டம் - உற்ற நாயே ச்  சொர்கத்துக்கு வழித்தோழன்.   அன்னக்கிளிக்கு இடதுகை இருப்பிடம். வண்ண மயிலுக்கு ஒய்யார நந்தவனம். கருடனுக்கு ஒரு மண்டபம் – ஓ! அந்த கடவுளுக்கே ஆஞ்சநேயன் நெஞ்சிலிடம்.   சிற்றெம்பு  முதல் சீறும் புலி வரை, மூஞ்சுறு முதல் நிலநீர் முதலை வரை, குருவி முதல் அருகி வரும் கழுகு வரை - அனைத்து உயிர்களையும் அரவணைக்கு ம்  இந்த த்  தர்மமண். 🙏 - ரா கி (ராதாகிருஷ்ணன்) 30 October 2023 Picture courtesy: veeteezy