பகுத்தறிவும் தயிர் வடையும்
பகுத்தறிவும் தயிர் வடையும் ப குத்தறிவாளர் என்பவர் அறிவுபூர்வமாக சிந்தித்து , ஆதாரங்களின் அடிப்படையில் செயல்படுவார் , முடிவுகள் எடுப்பார் - உணர்ச்சிகள் மற்றும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல். ' கடவுள் இல்லை ', ' மத சடங்குகள் மூடத்தனம்’ என்ற நம்பிக்கை கொண்டோர் நாத்திகர் - எந்த வித மத வேறுபாடும் இல்லாமல். பகுத்தறிவாளர்கள் , நாத்திகராக அல்லது கடவுள் மறுப்பாளர்களாக இருப்பார்கள் . இது எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் நாத்திகர்களுக்கும் பொருந்த வேண்டிய விளக்கங்களே … ஆனால்! நா த்திகர் / பகுத்தறிவாளர் என்றால் என் நினைவுக்கு வருவது கருணாநிதியோ , வீரமணியோ அல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதி பாசு அவர்களிளே! அவர் ஒரு உன்னத நாத்திகர். தன் நம்பிக்கைகளை பற்றி பேசும் பொது , " நான் நாத்திகன் , மார்க்சிஸ்ட் , கடவுளை நம்பவில்லை , மனிதநேயத்தை நம்புகிறேன்" என்றார் அவர். 23 ஆண்டுகள் தொடந்து மேற்கு வங்க முதல்வராக இருந்த அவர் , மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அறவே தவிர்த்தார் , அது எந்த மதமாக இருந்தாலு...