Posts

Showing posts from August, 2023

நிலவோடு உறவாடு 2.0

Image
வேதாளத்தின்   விடுகதைகளுக்கு விடை க்  கண்டான் வேந்தனான விக்ரமாதித்யன் அன்று . நிலவில் மெல் லிறங்கும் சூட்சுமத்தை   அவிழ்த்தான் நவீனனான விஞ்ஞான விக்ரம் இன்று . வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி அன்று , சுட்டியின் பூ பாதத்தில் மாக்கோலமாவை   ஒத்தியெடுத்து நடை ப்  பயில்வது ப்  போல இ த் தினம் இவன் நிலவில் எடுத்தான் முதல் அடி .   விண்வெளியில் இனி இவன் அடிகள்  மென்மேலும் எல்லையற்று த்  தொடரும். சந்திரயானுக்கு பின் விஸ்வரூபம் எடுப்பான்.  இந்திரனே, தயாராகச் சொல் அண்டசராசரத்தை!     இன்று:  சந்திரயான் ;      நாளை:   அண்டசராசரயான் - ரா கி (ராதா கிருஷ்ணன்) 23 August 2023