Posts

Showing posts from June, 2020

"உங்க டூத்பேஸ்ட்லே உப்பு இருக்கா?"

Image
"உங்க டூத்பேஸ்ட்லே உப்பு இருக்கா ?" லா க்டௌனால்  முடங்கிய எனக்கு தஞ்சம் கொடுத்தது டிவி மற்றும் இணையதள செனல்கள். முதலிரு வாரங்களில் கொரனோ செய்திகளில் சஞ்சாரித்தேன். அங்கே ஒரே ஓலம்! பயம் கலந்த சலிப்பால் உந்தப்பட்டு டிவி சீரியல்களை நோக்கி நகர்ந்தேன்.  ஆனால் , சில நாட்களிலேயே  படப்பிடிப்பு நின்றதால் ,  எவனையும் எமனையும் விஞ்சி சாசுவதம் பெற்ற சீரியல்களும் சட்டென  நின்றன , எல்லாம் வல்ல கொரோனவால். அப்புறம் டிவியில் சினிமாபடங்களை , செனல் மாற்றி மாற்றி  பார்த்தேன் -  சில நல்ல படங்கள் ; பல மொக்க படங்கள். பாத்து பாத்து போர் அடித்தது. படங்களைவிட இடையிடையே வந்த விளம்பரங்கள் என்னை ஈர்த்தன - சில நொடி நேரமே வந்து போவதாலோ ? சர்ப் எக்ஸல் (Surf Excel) குடும்பப்பெண் , " மூணு விரலே போதும்" , என்றார் - அப்போ சோப்பே தேவை இல்லையோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரக்கூடாது. இன்னொரு சோப்பு விளம்பரம் , " கறை நல்லது" என்றது. "யாருக்கு ?" என வினவக்கூடாது. சமூகத்தின் , மக்களின் தேவைகள் மாறும்போது , தயாரிப்பாளர்களின் பார்வை அதற்கு ஏற்றாற்போல நுணுக்கமாக ம...

விபத்துகளும் கமல்ஹாசன்களும்

Image
விபத்துகளும் கமல்ஹாசன்களும் சு பஸ்ரீ பேனர் சம்பந்தபட்ட விபத்தில் இறந்ததும் ,  ஆழ்குழாய் விபத்தில் குழந்தை வில்சன் இறந்ததும் ,   சமீபத்தில் இந்தியன்  2  படபிடடிப்பில் கிரேன் விபத்தில் மூவர் இறந்ததும் மிகவும் வருத்தமான நிகழ்வுகள். இந்த விபத்துகளிலிருந்து நாம் பாடங்கள் கற்றோமா ?   அவைகள் மீண்டும் ஏற்படா வண்ணம் என்னென்ன செய்ய வேண்டுமென கண்டுபிடித்தோமா ?  அவைகளை செய்தோமா ? ' ஆம் '  என்று உறுதியாக சொல்ல நம் மனம் தயங்குவதேன் ? பேனர் விபத்து படம்  கி ரேன் விபத்துக்கு வருவோம். கமல் மற்றும்    பலரும்    அதீத அனுதாபம் தெரிவித்தனர். ஆனால் ,   ஒரு சில தினங்களிலே    கமல் அவர்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் எழுதி பிரச்சினையை அவர்கள் வாசலில் வைத்துவிடுகிறார். தயாரிப்பு நிறுவனவும் பதில் கடிதம் எழுதிவிட்டார்கள்.    எது சரியான அணுகுமுறை ? உடனடி நிவாரணங்கள் ஏற்பாடு செய்தபின் ,  இந்த மாதிரியான விபத்துகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே!    விபத்துகளை தொலை நோக்குடன் ...