சேரும் சேறு !
சேரும் சேறு !
ஆற்றிலிருந்துத் தோண்டி எடுத்தச்
சேற்றுக் களிமண் கவளத்தைப்
பற்றுடன் கையால் உருட்டிப்
பற்றிப் பிடித்தோம் ஆனைமுகனை !
போற்றிப் பாடி, வணங்கினோம் !
சாற்றினோம், அவன் நற்பெயரை !
ஏற்றினோம் நல் தீபத்தை !
நற் பண்டங்களைப் படைத்தோம்;
உற்றாருடன் பகிர்ந்தோம்,
வயிறார உண்டுக் கழித்தோம் !
உற்ற நன்னாளில் நம் கணபதியை,
அவ்வாற்றுக்கே எடுத்துச் சென்று,
நட்டாற்றில் கரைத்தப் போது,
சற்றே மனதில் ரீங்காரித்தது,
மாற்றே இல்லாத அந்த நியதி:
'நம் சேறும், வந்த வழியேச் சேரும் !'
-ரா கி (ராதாகிருஷ்ணன்)
31 Aug 2025

RaKi turns philosophical on Ganesh Idol Immersion. The Life cycle nicely captured, Raki. The absolute truth!
ReplyDeleteThro this poem, Radha you emphasized that life is a cycle, every one of us has to undergo
ReplyDeletePunch line, really punchy
ReplyDelete. I have never read this concept before.
Very smart use of ரு, று.
நம் சேறும், வந்த வழியேச் சேரும்.
MANNIL THONDRIYA MUZHU MUTHART KADAVUL.
ReplyDeleteநன்றாக நினைவூட்டும் தத்துவம்!! சிறப்பு ராதா!!
ReplyDeleteசுழற்சி தொடரும் – தீர்வில்லை!
ReplyDeleteபிறப்பு, வளர்ச்சி, மரணம், மறுபிறப்பு,
வாழ்க்கை ஓர் வட்டம் போலவே,
முடிவின்றி மாறும் மேடை இது!
RaKi has nicely evoked a parallel bet'n Ganesh festival (starting with idol formation, pooja festivities and the visarjan with a request to come back next year) with our own life cycle & perhaps rebirth, both finally tracing their journeys back to their origins. Taking a cue from the blog, a philosophical thought arises as to how to break this never ending cycle of birth & death for human beings. This is a quest which many seekers contemplate and traverse the spiritual path towards that goal...a lofty ideal. This has been addressed by Saint Manickavasagar ... பிறப்பு அறுக்கும் எம்பெருமான்" (Pirappu Arukkum Emperuman) என்பது மாணிக்கவாசகப் பெருமானால் அருளப்பட்ட திருவாசகத்தில் வரும் ஒரு புகழ்பெற்ற தொடராகும், இதன் பொருள், "பிறவிக் கடலைக் கரைப்பவரே, எம்பெருமானே" என்பதாகும். இத்தொடர் சிவபெருமானை விளித்துப் பேசுவதாகவும், பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கும் வல்லமை படைத்தவரே எனப் போற்றுவதாகவும் அமைகிறது.
ReplyDeleteMay be RaKi can devote a blog on this related subject. Best wishes Raki. Keep it up.
A concept to think deep...Even the gods come from clay, a part of mother earth, get glorified and after their time they too go back to join the earth....A lesson to humans who think they are great.... Good thought Radha...I enjoy your blogs, stories, poems and comments...Keep going...
ReplyDelete