(சு)தந்திர வெறியர் !

 (சு)தந்திர வெறியர் !

'பத்தாயிரம் நாய்கடி, தினசரி !'

'இருபதாயிரம் மரணம், ஆண்டுக்கு !'

'அவதிப்படுவோர் பலர்,

முதியோரும் சிறார்களும் !'


"தூக்கிவாரிப் போடுதுப் புள்ளி விவரம்,

தூக்கிப் போடு நாய்களை காப்பகத்தில்!"

உச்ச நீதி மன்றம் அளித்தது,

உச்சகதியில் உத்தரவு!


ஆனால்....


நாய்யின சுதந்திரத்தை

நாம் பறிக்கக் கூடாது என

நாடெல்லாம் கூட்டம் கூடி,

நாய் ஆர்வலர்கள் போராட்டம் !


அவ்வார்வளர் ஒருவரை

ஆவலுடன் பேட்டிக் கண்டோம்.

"என் குழந்தைகளுக்கு உள்ள

எல்லாச் சுதந்திரமும்,

என் செல்ல டாமிக்கும்

என் வீட்டில் உண்டு!"

எனப் பெருமிதத்துடன்

என்னிடம் கூறினார்.


"குரலாற்ற ஜீவன்களுக்காகக் 

குரல் கொடுப்போம்,"

"நாய்யின சுதந்திரம் காப்போம்!"

"செய்வோம் இனிப் புரட்சி!"

கண்கள் செக்கச் சிவக்க

கணீர்ரெனக் குரல் கொடுத்தார்!


இச்சுதந்திர வெறியரின்

அசரா அசுரமனம் கண்டு

அசந்து விழுந்த நான்

எழுந்துக் கேட்டேன்: 


"டாமிக்கு ஒரு ஜோடி வேண்டாமா?"

"அதுக்குக் குட்டிகள் வேண்டாமா?"

"அது முடியாதக் காரியம்," என்றார்.

விந்தையுடன் "ஏன்?" என்றேன்.

எந்தவித அலட்டலும் இல்லாமல்,

அந்தச் 'சுதந்திர வெறியர்' கூறினார்:

"விந்தகத்தைத் தான் நீக்கி விட்டோமே!"


-ராகி (ராதாகிருஷ்ணன்)

19 August 2025

Comments

  1. It is humane to sterilize street dogs
    It is humane to vaccinate street dogs
    It is humane to let street dogs wander around
    It is humane if these dogs tear human flesh!!

    It is humane to sterilize pet dogs
    It is humane to vaccinate pet dogs
    It is humane to cage dogs at home sweet home
    It is humane to take pet dogs out without leashes! (Don't blame them if they bite!!)

    The hypocrisy of ardent dog lovers (and not human lovers) is brought out with punch by RaKi. Well done.

    An additional thought lingers ... haven't the dogs (both street and pet) turned more violent these days? Why? Barking dogs seldom bite, goes the adage. These days dogs bark and bite!!

    ReplyDelete
  2. Difficult to understand the logic of these dog lovers 😡

    ReplyDelete
  3. Arumai…!! For every ‘concerns’ there must be logic and beneficial for all concerned. Did these ‘dog(s) lovers’ came out to protest the Pahalgam terror?

    ReplyDelete
  4. மிகவும் அருமை
    ராகி.

    நம் கதையின் நாயகன் (?) நாய்க்கும் கீழானவன்.
    சுதந்திரம் இவன் கொடுப்பதுதான் என்றால், எங்கே இருக்கிறது சுதந்திரம்?

    நாயகனாக காட்டப்படுபவர்கள் உண்மையில் தகுதியுள்ளவர்களா என்பதை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

    இவன் நாயின் விந்தகத்தை அகற்றியதில் ஒரு விந்தையும் இல்லை.

    இத்தகைய போலி போராளிகளின் முகமூடிகளை கிழித்தெடுத்து, உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

    ராஜா ஸ்ரீதர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படம் எடுத்தப் பாடம் !

சேரும் சேறு !

மரணத்தின் விளிம்பில் !