காப்பகம்

காப்பகம்

'திரு வீதிகளில் உலா வரும்

தெரு நாய்களை எல்லாம்

அரசுக் காப்பகங்களில்

அவசரமாக அடைக்க வேண்டும்'

உச்ச நீதி மன்றம்

உச்சகதியில் உத்தரவு !


நாய்களைக் கூண்டில் அடைப்பதா?

அவைகளின் சுதந்திரத்தைப் பறிப்பதா?’

நாய் பிரியர்கள் ஆவேசம்!

நாடெங்கும் போராட்டம் வெடித்தது !

நம் நாய் பிரியரும்

தம்மென குதித்தார் அதில் !


"என் பரந்த பங்களாவின் உள்

என் மனைவி மக்கள் தவிர

எங்கள் செல்ல டாமிக்கும்  

தங்கும் வசதி உண்டு!

என் படுக்கை வரை

அவனுக்குச் சுதந்திரம் உண்டு !"

பெருமிதத்துபிடன் அவர் சொன்னது,

இதமா இருந்ததுக் கேட்பதற்கு.


மனம் விட்டுப் பாராட்டினேன்,

"அண்ணே, மிகச் சிறப்பு!

என்னே உங்கள் பரந்த மனம்!"


சும்மா இருக்காமல் அடுத்து

"அம்மா, அப்பா எங்கே ..?" என

சட்டெனக் கேட்ட எனக்கு,

பட்டென வந்தது பதில்:

"முதியோர் காப்பகத்தில்!"

 

-ரா கி (ராதாகிருஷ்ணன்)

12 August 2025

Comments

  1. Arumai, the last few words are ‘Nach’ nailed our mindset 🙏

    ReplyDelete
  2. Stray dogs tearing into human flesh of running young kids have been a scary sight in social media. Are there no safe roads for kids to walk in the country?
    Sterilization is the way forward., wise men and animal lovers said. But rabies affects even sterilized dogs was the concern. Peta said canine friends have freedom of movement and expression (read biting)! How can you curtail that? The Supreme Court said keep them in constrained spaces, not on the roads. Peta is agitated. They ask how can humans have a right over the canine?

    RaKi explains this in his characteristic style, with a punching twist in the end. The punch says it all ... the mindset of the animal lovers!!
    Delivered in style, RaKi!

    ReplyDelete
  3. பரந்த பங்களா, தாய்க்கு வாய்த்ததோ பறந்த பங்களா!!
    தூசுக்கூடமே!!
    சும்மாக வாய்பேசும் சீரிய மனிதர்
    சிறியதொரு கேள்விக்கு சோர்ந்து போனார்!!
    தெருநாய்க்கு சுதந்திரம் நாகரீகத்தினால்
    ஆனால் இங்கோ அன்பை
    அளக்கிறது சொத்து தனிமையில்!!
    அழகாய் அமைந்ததொரு கவிதை
    கோணம் மாறியதோ நொடிக்கணத்தில்!!
    நாவும் நெஞ்சும் சற்றே நின்றன!!
    பாசத்துணுக்கை பகிர்ந்த நேரம்!!
    புதுமை தொடர்கிறது பின்னோக்கி!!

    ReplyDelete
  4. Superb👏👏👏

    ReplyDelete
  5. Parents are kept in the kappagam without high court order.

    ReplyDelete
  6. Naai..Thaai. Vithiyasam theriyatha MIRUGANGAL

    ReplyDelete
  7. மிகவும் அருமை….ராதாவின் சுருக் குத்து அதி கூர்மை…தொடர்க உன் பணி…

    ReplyDelete
  8. BOW!... SORRY!...VOW!...YOU NAILED THIS TIME!...

    ReplyDelete
  9. அருமையாகவும் அழுத்தமாகவும் இருக்கின்றது.

    ReplyDelete
  10. Very poignant - exposing the hypocrisy of our society.

    ReplyDelete
  11. Raki, You have strongly hit at the misplaced priorities and lack of values prevailing in our society. You have the knack of picking up a contemporary topic and linking it with a pressing social malaise. Please keep it up.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படம் எடுத்தப் பாடம் !

சேரும் சேறு !

மரணத்தின் விளிம்பில் !