ஒரு மகா நடிகன்!

ஒரு மகா நடிகன்!

தொல்லைத் தரும் வாரிசு அரசியலை எதிர்த்துத் 
தொலைக்காட்சிப்  பெட்டியை உடைத்தாய்! 
அப்பெட்டிக்  குப்பைக்கூடையை அடையும்முன் 
பெட்டிப் பாம்பாய் அடங்கினாய்!

அரசியல் ஒரு நாற்றம் பிடித்தச் சாக்கடை
அவசியம் அதைச் சுத்தம் செய்வேன் என  
வாக்கு ஒன்று அளித்தாய் - அந்தோ 
அச்சாக்கடையிலேயே சங்கமம் ஆனாய்! 

மாற்று அரசியல் தருவேன் என்றாய். 
ஏமாற்று வேலையைத் தான் புரிந்தாய்!
ஒப்பற்ற நடிகனென பெயர் எடுத்தாய்; 
ஒப்புக்கொள்கிறோம், நீ ஒரு மகா நடிகனே!

-ரா கி (ராதாகிருஷ்ணன்)  30 May 2025

Comments

  1. Super, very apt, explained in RK style

    ReplyDelete
  2. Politics. ORE KUTTAIYIL UOORIYA MATTAIGAL.YOU DETAILED IT IN A SPECIAL WAY. VERY NICE

    ReplyDelete
  3. Raki, You have beautifully brought out the real face of the man. நிழல் நிஜமாகிறது ! Best wishes.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படம் எடுத்தப் பாடம் !

சேரும் சேறு !

மரணத்தின் விளிம்பில் !