கொலவெறி !
1. கொலவெறி !
ஓடும் ரயில் முன்
செல்பி எடுத்தவனை
எக்ஸ்ரே எடுக்கிறார்கள் இப்போ !
2. விரய நீதி
நீதி அரசரின் பேராசை -
அரசர் ஆக.
ஆக, நீதி ஒழியட்டும் !
3. வியர்ப்பு
வியர்க்க உழைத்தவன்,
வியக்க உயர்ந்தான் !
4. வாக்கிங்
உழைக்காமல் உண்டுக் கொழுத்தவன்,
உழைத்தான், உடல் இளைக்க !
5. கோடிடு
அந்தக் கோடி வீடு
நீதியரசர் வீடு.
கிட்டியது அங்கே
கோடானுக் கோடி.
கோடிடா வாழ்வு
கேடுத் தருமாம் -
தருமா, தருமா ?
6. கல் நெஞ்சக்காரி
எறும்பூறக் கல் தேயுமாம்.
ஊறுகிறேன், நான் ஊறுகிறேன்,
ஊறிக்கொண்டே இருக்கிறேன்.
7. பூ
சிறுபொழுதே வாழ்ந்தாய்.
நறுமணம் தந்து மாய்ந்தாய் !
மணம் மாறுவேனோ நான் ?
8. பறக்கும் கனவு
ஊறும் கம்பளிப்பூச்சி
உருமாறும் வண்ணத்துப்பூச்சியாய்!
பறக்கும் கனவு நனவாக,
கர்ப்பகாலம் தான் கழியட்டுமே !
9. ஆனந்தம்
ஆனந்தப் பவனில்.
பாய்ந்ததுக் கூட்டம் !
முதலாளி முகம்
ஆனந்ததின் பவனம் !
10. இளமையில் கள் ?
அந்த பள்ளி மாணாக்கர்கள்,
அந்தோ, டாஸ்மாக்கில் ஒதுங்கினர் !
எந்த ஒலிப்பில் வந்த குழப்பம் இது ?
- ரா கி (ராதாகிருஷ்ணன்)
22 April 2025
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
ReplyDeleteKalaiyil Ananthaththudan kooditta idathil viyarpudan walking Sendren. Ange antha Kalnejjakkari kola veriyudan Ilasugalidam Kal virtrukkondirinthal. Neethi enbathu parakkum kanavu. Ithu viraya neethi.RA KIN SIRU KATHAI.
ReplyDeleteVAZHTHUKAL
ReplyDeleteRadha each and every one is top notch. Think your Boss is well aware how to unearth your hidden talents and put to good yse
ReplyDeleteVery nice. Best wishes
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா.
ReplyDeleteநன்றாக உள்ளது
Enjoyed each Suruk Kavitai -especially the 2nd and 5th. Kudos to you.
ReplyDeleteGood one👌
ReplyDeleteபத்தும் முத்துக்கள்.
ReplyDeleteReally சுருக்.
வியர்ப்பு, வாக்கிங் definition அற்புதம்.
விரய நீதி, கோடிடு- இன்றைய அவலம்.
ராகி, தொடரட்டும் நின் பணி.
- இளங்கோவன்
அருமையான படைப்பு - அனந்தன்
ReplyDeleteRaki's cryptic verse punches
ReplyDeleteThe shorter it is, the harder the punch
Love your punches, all of them
Keep at it, your fitness exercise.
Suruk, suruk!!
Excellent Radha, Every poem has a new, lateral theme and you have made it enjoyable... கடுகு சிறுத்தாலும், காரம் குறையவில்லை என்ற பழமொழி போல், கவிதை சிறுத்தாலும், கருத்து குறையவில்லை...
ReplyDeleteமென் மேலும் வெளுத்து வாங்கு, என் பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும்...,,!
ராகியின் இரண்டு அடி குரல் .
ReplyDeleteசுருக் என்று தைத்தாலும் அதை சிந்தித்து அசை போடுபவர்களுக்கு அது ஒரு அக்கு பஞ்சர் சிகிச்சை.
உறங்கும் விழிப்புணர்வை தட்டி எழுப்பும்.
வாழ்த்துகள் *ராகி*
நன்றாக உள்ளது ராதா!!
ReplyDeleteசுரு(க்)ங்க சொல்லியிருக்கிறீர்கள்.. விரிந்த நிகழ்வுகளை!!