நினைவிலைகள்
தூண்டியது ஒரு நினைவலை.
சீண்டிப் பார்த்தது மனம்.
தாண்டியக் கதவிலோ மறதி.
தோண்டியப் போது அசதி.
மீண்டதுப் பாதியிலும் பாதி.
கண்டதோ நினைவழிவின் துவக்கம்.
சீட்டில் எழுதிப் பத்திரபடுத்தியும்,
அச்சீட்டு வைத்த இடம் மறந்ததென்ன!
வீட்டைப் பூட்டி இழுத்து இழுத்துப் பார்த்தும்
எட்டடியில் ஐயத்துடன் திரும்பியதென்ன!
எட்டிநடையுடன் கடைவீதிக்கு வந்துவிட்டு
எடுத்துவராத வண்டியைத் தேடுவதென்ன!
கண்டப் பழம்பெரும் நண்பனின்
கொண்டப் பெயர் பிடிபடாததென்ன!
உண்டபின் உட்கொண்ட மாத்திரையை
மீண்டும் எடுக்க முனைவதென்ன!
மூக்குக்கண்ணாடியைத் தலைமேல் தள்ளிவிட்டு
மூலை முடுக்குகெங்கும் துருவுவதென்ன!
பசுமை நிறைந்த நினைவு அலைகளும்,
சுமை ஏற்றும் நினைவுச் சூறாவளிகளும்,
காலத்தின் கட்டாயமாக ஒருமித்ததென்ன!
காலங்கள் காட்சிகள் மாறியதென்ன!
விலைத்தந்துத் தக்கவைக்க முடியுமா என்ன
இலையுதிரில் உதிரும் இந்நினைவு இலைகளை?
- ராகி (ராதாகிருஷ்ணன்)
7 ஆகஸ்ட் 2024
Picture courtesy:
https://integrativelifecenter.com/mental-health-treatment/childhood-trauma-memory-loss/
Picture used under fair use, as an add-on for a poem. No copyright infringement
intended.

Marathiyalum marakka mudiyathathu Ra Ki n NINAIVALAIGAL.
ReplyDeleteMemory Loss is a concern as one ages. Excellent examples of simple instances of memory failure. It happens all the time.
ReplyDeletePerfect rhyming poem on Memory Loss.
I had many more to write about the poem. What was it? Suffice to say, I fully empathise with the poet.
Lovely reading I had, twice (or was it thrice?) to register! Kudos to the poet!!
True. But one cannot forget Radha 😁👍
ReplyDeleteI always wonder this is happening to me only as I am ageing. Now I realise slowly that I am not an exception.
ReplyDeleteAnyway the poem is excellently coined and brings out our helplessness day in and out. Keep it up Raki
Excellent creations
ReplyDeleteSuper reality, I face the same especially while cooking 😢
ReplyDelete