ஆட்டநாயகன்

ஆதியும் காணோம்,

அந்தமும் இல்லை!

அலைப் பாயும்,

ஆழமோ, அதல பாதாளம்!


பரவலோ எங்கெங்கும்,

பார்வையோ அண்டமெங்கும்!

மருவும், மறையும்,

உருவமும் அற்றது!

 

தட்டிக் கொடுக்கும்,

தட்டியும் விடும்!

ஆட வைக்கும்,

ஆட்டு விக்கும்!

 

உடைந்துப் போகும்,

கடந்துப் போகாது!

சீண்டிப் பார்க்கும்,

நோண்டி எடுக்கும்!


தேடி அலையும்,

ஓடி ஒழியும்!

சிறையும் படாது,

கரையும் ஏறாது!

 

அப்படியென்ன,  இப்படியென்ன,

அப்பப்பா, எப்படியெல்லாம்,

திக்குமுக்காட வைக்குதே,

சிக்குப்பிடித்த  எம்மனம்!


- ரா கி (ராதாகிருஷ்ணன்)

26 ஜூலை 2024


Picture Courtesy: Maria Corte 

 https://www.scientificamerican.com/article/mind-from-matter/

Comments

  1. YAKKAR BOWLING RAKI

    ReplyDelete
  2. Radha your multi talente are forcing outside the gate like water flowing during floods

    ReplyDelete
  3. அருமை, தேர்ந்தெடுத
    த பொருத்தமான வார்த்தைகள்…. வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. Beautiful poem with superb rhyme. You keep the reader puzzled till the end about the meaning with excellent use of words. You have a great skill, keep going! 👏👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படம் எடுத்தப் பாடம் !

சேரும் சேறு !

மரணத்தின் விளிம்பில் !