முனி மூலம்
பணிச் செவ்வனே முடித்தான்.
அணிச் செய்யப்பட்டான்.
பிணி ஏறியதுத் தலையில்;
தொனி மாறியது;
ஏணியை எட்டி உதைத்தான்.
சனிப் பிடித்தது.
அணிச் சிதைந்தது.
பணி பிணி ஆனது.
பிணிப் படர்ந்தது.
கனிக் கசந்தது.
தனிமையில் தேடினான்.
பனி விலகி
ஞானி ஆனான்.
இனி தனி நாடும்
முனி அவன்.
- ரா கி (ராதாகிருஷ்ணன்)
20 June 2024
Image: Courtesy https://steemit.com/life/@steemedi/self-realisation-i

மணி மணியான கனி௧்௧விதை
ReplyDelete