கோடை மயில் தோகையை விரித்தாள்!


சுட்டெரிக்குதுக் கோடை வெப்பம்.

பட்டெனத் தெறிக்குது வெப்பமானி.

கொட்டோக் கொட்டெனக் கொட்டுது வியர்வை,

தொட்டதெல்லாம் சுட்டோச் சுடுவென சுடுது,

தட்டுத் தடுமாறுது நம் சென்னை.

விட்டுவிட்டு ஓடச்சொல்லுது உ/என்னை!


ஆனால்


கடும் கோடையைக் கண்ட உடனே,

படுக்கொண்டாட்டம் தான் உனக்கு.

மட மடவென இலைகளை உதிர்த்தாய்.

படபடவெனப் பொன் தோகையை விரித்தாய்.

வியர்த்து வழியும் எம்மைக் கலாய்க்க,

பூத்துக் குலுங்கினாய் சரக்கொன்றையே!

- ராகி (ராதாகிருஷ்ணன்)

10 April 2024


Comments

  1. Super Raki !!👏👏

    ReplyDelete
  2. Aha.. Super 🤝

    ReplyDelete
  3. VEPPAM THANINTHATHU RADHA

    ReplyDelete
  4. Nice Raki! The words rhyme and definitively speak! Of the Summer raging hot in Chennai! The pace of the words is intense and you feel the heat and perspire. Is there an escape? RaKi answers it by moving to Kovai. But then more intense heat rages there!!!

    Now the aanaal! What a contrast!!

    The Sara konrai has shed it leaves and bloomed so fast, splashing an yellow smile at onlookers. There is no match for this peak summer flower. May be, the peacock spreading its beauty is a close match!

    This April flower is indeed a beauty! I mean the April poem from Raki!!

    ReplyDelete
  5. Good one Radha..I wonder how you are able to link மயில், கோடை, & சரக்கொன்றை...which are totally unconnected... சரக்கு ஒன்றை(Chill பீர்) கையில் எடுத்து இருந்தா, இந்த கோடையை சமாளித்து இருக்கலாமோ..??

    ReplyDelete
  6. Wow! I loved the last line.
    Changed the direction to a positive Outlook.

    ReplyDelete
  7. usual super stuff

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படம் எடுத்தப் பாடம் !

சேரும் சேறு !

மரணத்தின் விளிம்பில் !