தர்மமண் தழைக்கட்டும்!



கருங்காகத்திற்கு ஒரு பிடிச் சோறு. 
கட்டெறும்புக்கு ஒரு மாக்கோலம்.
குண்டுகணேசனுக்கு பெரும் கவளம் - தெப்பக்
குளத்து மீனுக்கும் பொரி தீனி.

நந்திக்கு முந்தி ஓரு இடம்.
நாகத்திற்க்கு கழுத்திலொரு இடம்,
நம்பசுவுக்கோ கோமாதா பட்டம் - உற்ற
நாயேச் சொர்கத்துக்கு வழித்தோழன்.
 
அன்னக்கிளிக்கு இடதுகை இருப்பிடம்.
வண்ண மயிலுக்கு ஒய்யார நந்தவனம்.
கருடனுக்கு ஒரு மண்டபம் – ஓ! அந்த
கடவுளுக்கே ஆஞ்சநேயன் நெஞ்சிலிடம்.
 
சிற்றெம்பு முதல் சீறும் புலி வரை,
மூஞ்சுறு முதல் நிலநீர் முதலை வரை,
குருவி முதல் அருகி வரும் கழுகு வரை - அனைத்து
உயிர்களையும் அரவணைக்கும் இந்தத் தர்மமண்.

🙏
- ரா கி (ராதாகிருஷ்ணன்)

30 October 2023


Picture courtesy: veeteezy

Comments

  1. Super, your Tamil proficiency s also equally fantastic like English

    ReplyDelete
  2. A great introspection into our simple day to day practices! Passed on to Indian mindset from generations to generations.

    The simple care, love and affection to all forms of life around us ... small or big is an eternal idea. The small deeds that we do symbolises the greater concept of Lokaa Samasthaa Sukhino Bhavanthu! The grand Indian thought!!

    If this isn't Sanatana Dharmam, what is?!?!

    The poetic craft is elegant, as expected from Raki. There is a brimming positive vibe emerging from the presentation.

    Peace be on earth! Create more, Raki!



    ReplyDelete
  3. .
    Elegant poetry.

    ReplyDelete
  4. அருமை ராகி…சொற்சுவையும் பொருட்சுவையும் மிகமிக அருமை…ஆழ்ந்த கருத்துக்கள்…புதுமைப் படைப்பு…வாழ்க உன் பணி…SuBa

    ReplyDelete
  5. Nice poetry 👌

    ReplyDelete
  6. அருமையோ அருமை உன் சிந்தனையும் அதை வார்த்த அழகும்.. ஒரு தமிழ் புலவன் எங்களிடையே இருப்பது கண்டு மகிழ்ச்சி, பெருமை..மேலும் நிறைய கொட்ட வாழ்த்துக்கள்..,,👍

    ReplyDelete
  7. நன்று ராதா 🤝 அருமையான சிந்தனை!!!

    ReplyDelete
  8. Super rocking RK

    ReplyDelete
  9. படைத்தவன் கேட்ட போது
    ஆங்கிலம் ‘கொண்டா’
    தமிழும் ‘கொண்டா’
    என்றுரைத்தீர் போலும்
    ‘சிகரத்தில்’ இருக்கிறது
    மொழி நடை !
    👏👏👏

    ReplyDelete
  10. Nice one Radha. You have woven a fine tapestry of our culture, traditions and dovetailed these into the spiritual realm seamlessly. You have made us reflect, ponder, appreciate and enjoy our stay in our sojourn on earth. Keep it up RaKi👏👏👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படம் எடுத்தப் பாடம் !

சேரும் சேறு !

மரணத்தின் விளிம்பில் !