நிலவோடு உறவாடு 2.0

வேதாளத்தின் விடுகதைகளுக்கு விடைக் கண்டான்

வேந்தனான விக்ரமாதித்யன் அன்று.

நிலவில் மெல்லிறங்கும் சூட்சுமத்தை அவிழ்த்தான்

நவீனனான விஞ்ஞான விக்ரம் இன்று.


வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி அன்று,

சுட்டியின் பூ பாதத்தில் மாக்கோலமாவை 

ஒத்தியெடுத்து நடைப் பயில்வதுப் போல

த்தினம் இவன் நிலவில் எடுத்தான் முதல் அடி.

 

விண்வெளியில் இனி இவன் அடிகள் 

மென்மேலும் எல்லையற்றுத் தொடரும்.

சந்திரயானுக்கு பின் விஸ்வரூபம் எடுப்பான். 

இந்திரனே, தயாராகச் சொல் அண்டசராசரத்தை!   


இன்று: சந்திரயான்;     நாளை: அண்டசராசரயான்


- ரா கி (ராதா கிருஷ்ணன்)

23 August 2023

Comments

  1. வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது அன்று. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பர். வேதாளம் பல எட்டுக்கள் ஏறியதோ?! பரவாயில்லை! குட்டி விக்ரமன் சற்றும் சளைத்தவன் இல்லை. தன் முயற்ச்சியில் மீண்டும்!!

    ReplyDelete
  2. Super🦶🦶 in nilavu👌

    ReplyDelete
  3. RaKi, Very nice thoughts and so contemporary. Linking ancient wisdom & insights and dovetailing these to the present world in Chandrayan context is excellent. Keep it up RaKi.

    ReplyDelete
  4. Super poem- published immediately after Chandrayan landed on the moon.

    "அண்டசராசரயான்" - Excellent name for missions beyond moon.

    Keep it up RaKi.

    - Elangovan

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படம் எடுத்தப் பாடம் !

சேரும் சேறு !

மரணத்தின் விளிம்பில் !