பெரு நகரம், பெரு மூச்சு!

பெரு நகரம், பெரு மூச்சு!  

தேடி வந்தடைந்த  என்னை,

பாடாய்ப் படுத்துது சென்னை. 

கால நேரம் அறியாமல் 

ஓலாவில் உலா வந்தேன் நானே.


வேலை முடிந்த வேளை,

பிதுங்கி வழிந்ததுச் சாலை.

நேரம் போகப் போக, 

நெரிசல் கூடி கூடிப் போக,

சாலையில் குவிந்த வண்டிகள்,

சாரைச் சாரையாய் ஊர்ந்தன.

பெருமைக்குரியப் பெருநகரம்,

பெருநரகம் ஆனது இப்போ.


அவசர கதியில் எல்லோரும்.

அவரவர் இலக்கு அவரவர்க்கு.

ஒவ்வொரு அங்குல வெற்றிக்கு, 

ஒட்டி, வெட்டி, உரசி  ஓட்டினர்.

அக்கம் பக்கம் உள்ளோர்

அனைவரும் எதிரியானார்களே.

ஆயிரம் போர்முனைகள் உருவானதே!

உச்ச நேர நெரிசலில் 

மூச்சு திணறியதுச் சாலையே! 


வழித்தடம் இன்றி தடுமாறி 

விழி பிதுங்காமல் இருக்க 

வழி என்ன என்றெண்ணும்போது 

விழிப்பு வந்தது அங்கே! 


ம்புலன்ஸ் வண்டி ஒன்று, 

அவசர ஒளி/லி ஒளி/லிக்க,

அதனுள்ளே ஒரு உயிர் துடி துடிக்க,

கண் இமைக்கும் நொடியில், 

வண்டிகள் அனைத்தும் ஒருசேர,

போர் நிறுத்தம் ஒலிக்காமல் ஒலித்து, 

ஓர்ஒரமாக இல்லாதயிடம்கண்டு ஒதுங்க

எம் வாசுதேவருக்கு வழி விட்ட 

யமுனையை போல் வழி ஒன்று கிட்ட 

உயிர் காப்பான் அவ்வழிக் கண்டு 

உயிர் பிடித்து ஓடி மறைந்தான்.


பிரம்மாண்டப் பெருநகரத்தார் தானே, 

பிரமித்துதான் போனேன் நானே! 


அக்கணம் ஈட்டிய நன்னய மூச்சு,

சிக்கனம் ஏதும் பாராமல் 

எக்கணமும் நிலைக்கட்டுமே என்றது 

என்னுள்ளோருப் பெரு மூச்சு!


ரா கி (ராதா கிருஷ்ணன்)

Comments

  1. The Abu Dhabi returned finds a new Chennai to live in! A busy enlarged Chennai!! Metro work makes the road narrower. But plenty of life still moves on.

    Chaos is the essence of Chennai. Until a hooting ambulance, makes other vehicles find space (that never seemed to exist) to let that clinging life survive. A whiff of sea breeze fills the space that the ambulance left. A short relief for the breathless humanity!

    Wonderful thought, wonderful expression, Radha! Loved it, just like Krishna on his first voyage across waters!!

    ReplyDelete
  2. அருமை!! அற்புதம்!!

    ""வாசுதேவருக்கு வழி விட்ட 
    யமுனையை போல்""
    இவ் வரிகள் மிக நேர்த்தியான ஒப்பீடு..

    Super..!

    ReplyDelete
  3. Super expression of the reality 👌

    ReplyDelete
  4. Replies
    1. அருமையான கவிதை, ராதா!!
      It is really amazing how the Ambulance finds its way ( rather the other vehicles find a space to move away !!!) in such a crowded/ chaotic traffic !!

      Delete
  5. அருமையான கருத்து
    வலிமையான சொற்கள்
    ஆழ்ந்த சிந்தனை
    அவசர ஊர்திக்கு
    வழியை உருவாக்கும்
    நல்உள்ளங்களைப் பற்றி
    சிந்திக்க வைத்த
    நல்ல படைப்பு…

    ராகி…வாழ்க உன் பணி…

    அன்புடன் சுபா…

    ReplyDelete
  6. Another good one RaKi. You have captured city traffic ordeals so realistically. As rightly inferred, as long as people continue to create space for ambulance movement in spite of chaotic traffic, hope for the life inside the ambulance and in a broader sense humanity itself exists.

    ReplyDelete
  7. Vivid description of Chennai traffic.
    The two photos authenticate the description.

    Finding way to the ambience, indicates the presence of humane nature amidst the chaos.
    Excellent RaKi.
    - Elangovan

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படம் எடுத்தப் பாடம் !

சேரும் சேறு !

மரணத்தின் விளிம்பில் !