மரணத்தின் விளிம்பில் !
மரணத்தின் விளிம்பில் !
காற்றின் வீச்சில்
என் மூச்சு உயிர் பெற்றது.
பயிரின் அறுப்பில்
என் பசி ஆறியது.
காய் கனியின் நறுக்கலில்
என் உடல் ஊட்டம் பெற்றது.
மிருகயினத்தின் அற்பாயுசில்
என் புரதம் செருக்கெறியது.
என் மூச்சு உயிர் பெற்றது.
பயிரின் அறுப்பில்
என் பசி ஆறியது.
காய் கனியின் நறுக்கலில்
என் உடல் ஊட்டம் பெற்றது.
மிருகயினத்தின் அற்பாயுசில்
என் புரதம் செருக்கெறியது.
நதியோட்டதின் தடையால்
என் தாகம் தணிந்தது.
காபி விதையின் வறுத்தலில்
என் பானம் சுவையானது.
பூப் பறிப்பில்
எனக்கு நறுமணம் கிட்டியது.
பருத்தி, நார், முறுக்கலில்
என் உடை உருவானது.
பழரசப் பிழியலில்
என் போதைக்குப் போதை ஏறியது.
தாதுத் தோண்டலில்
என் உபகரணங்கள் உற்பத்தியானது.
தேக்கின் முறிவில்
என் கட்டில் உண்டானது.
ரப்பர் மரத்தின் அழுகையில்
என் வண்டிச்சக்கரம் லகுவானது.
பச்சிலையின் கசக்கலில்
என் உடல் குணமானது.
இன்னும் பற்பல பெற்றேன்
புவிச் செல்வச் சகாக்களை துன்புறுத்தி !
தேக்கின் முறிவில்
என் கட்டில் உண்டானது.
ரப்பர் மரத்தின் அழுகையில்
என் வண்டிச்சக்கரம் லகுவானது.
பச்சிலையின் கசக்கலில்
என் உடல் குணமானது.
இன்னும் பற்பல பெற்றேன்
புவிச் செல்வச் சகாக்களை துன்புறுத்தி !
ஆனால் நான் கொண்டு வந்தது என்ன ?
மரணத்தின் விளிம்பில்
விடைகளைத் தேடுகிறேன்.
பெற்றது உலகளவு
கொடுத்ததுக் கடுகளவு கூட இல்லை !
செல்வங்கள் பல ஈட்டியும்
மரண வாசலில் ஏழையாய் நிற்கிறேன்.
போதை தெளியும் வேளை
பேதை ஆனேன்.
எல்லாம் அள்ளித் தந்த புவிக்கு
இப்பூவுடல் தவிர வேறில்லை என் காணிக்கை.
- - ரா கி என்கிற ராதா கிருஷ்ணன்
💔
%20Death%202.jpg)
Surukkendru kuthiyathu, kavi Rakiyae! The Earth's pain behind our pleasures pricks the conscience. Very sharp prick. Do something today before it is too late is the message. Nice read and call for action RaKi.
ReplyDeleteThank you Easwaran for your comments.
Deleteஅருமையான வரிகள். ஆழ்ந்த கருத்து…சிந்திக்கத் தூண்டியது..இது வரையில் ஏதும் செய்யவில்லையே என்று விசனப் படாமல் இனி மிஞ்சி இருக்கும் நாட்களிளாவது என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் தலை தூக்கியது…இந்த விழிப்புணர்ச்சியைத் தூண்டிய ராகிக்கு நன்றி…உன் பணிகள் தொடரட்டும்…
ReplyDeleteThank you Suresh Babu for your comments.
DeleteGreat going RaKi....👏👏👏Very profound thoughts ! When one is reflective of his role in the wordly scheme of things such humane thoughts make us pause and take a more compassionate view of things. In a divine context, I recall Thirumoolar who provides us some hint of starting with simple things for us to ponder....which suits this *Suruk*Simple prescription for a fruitful life
ReplyDeleteதிருமூலர் திருமந்திரம்
முதல் தந்திரம்
பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
திருச்சிற்றம்பலம்
thirumUlar thiruman^thiram
mudhal than^thiram
paththAm thirumuRai
thirucciRRambalam
yAvarkkumAm iRaivaRku oru paccilai
yAvarkkumAm pacuvukku oru vAy uRai
yAvarkkumAm uNNum pOthoru kaippiDi
yAvarkkumAm piRarkku innurai thAnE.
thirucciRRambalam
Meaning:
It is for all, (to offer) a green (fresh) leaf to God.
It is for all, (to provide) a mouthful of food for the cows
It is for all, (to donate) one handful of food when eating,
It is for all, (to speak) pleasant words to others.
Notes:
1. The prescription thirumUlar gives here is easy and
simple to be followed by anybody and everybody.
Divinity embedded charity for the benefit of the
world along with self !
2. uRai - food; innurai - pleasant words.
Thank you Sridhar for your comments and for highlighting the profound aspects of Thirumoolar's Thirumandiram.
Deleteஇறந்து விட்ட மனிதனை நாம் இயற்கை எய்தினான் என்று சாதாரணமாக கூறுவோம். ஆனால் மனிதன் வாழும் ஒவ்வொறு நொடிகளிளும் இயற்கையோடு ஒன்றி வாழ இயலாமையை, நான் என்ற உளவியல் சுழற்சியில் சிக்கி இந்த உயிரை பற்றியோ படைத்தல் பற்றியோ சிறிதேனும் கவனம் இல்லாமல் போனதை என்னவென்பதோ?!
ReplyDeleteThank you Mr Raja for your comments and expression of anguish.
DeleteSirappu RA.KI avargale 👏
ReplyDeleteArumayana karuthu with truth stuffed in it 👏
Vallalar thedum MANITHANAI innum kanavillaiye..ungal thedal arumai.
ReplyDeleteஅருமையான வரிகள் !அற்புதமான கருத்து!
ReplyDeleteExcellent words Uncle!simply superb...
ReplyDelete