இதுதாண்டா உன் மரண தேதி!

"இதுதாண்டா உன் மரண தேதி!"

"ல்லா கேட்டுக்கோநடேசாஇதுதான் உன் மரண தேதி…”

நடேசன் கெஞ்சக் கெஞ்சஅந்த கெஞ்சல்களைக் கொஞ்சமும் கேளாமல்அதிகாரத் தொனியில், மரண தேதியை அறிவித்து விட்டார், 'அவர்'. 

"இருபத்தி ஏழாம் தேதிமே மாதம்இரண்டாயிரத்து ......".

நடேசனுக்கு மூச்சு இரைத்தது


சரக்கென்றுக் கண்களை திறந்தான். வரவேற்பு அறை சோபாவில் உட்கார்ந்து இருந்தான்.

நடேசன் வழக்கமாக வேலை நாட்களில் காலை 6:30 மணிக்கு எழுந்திருப்பான்.  இன்றோ அதிகாலை 4 மணிக்கேத் தூக்கம் கலைந்ததுகாலைக்கடன் முடித்துவிட்டு வரவேற்பு அறை சோபாவில் உட்கார்ந்த ஞாபகம். களைப்பில் சோபாவில் உட்கார்ந்த படியே தூங்கிவிட்டோமோ என் நடேசனுக்கு தோன்றியது.

ஆகவே இந்த மரண தேதி நிகழ்வுவை கனவு என்று வகைப்படுத்த முடியுமா எனத்  தெரியவில்லை

மேலும் நடேசனுக்கு, வழக்கமான கனவுகள்மேகங்கள் மேல் நடப்பது போல்பஞ்சு போலதிடத்தன்மை இல்லாதவைகளாக இருக்கும். 

ஆனால் இன்றைய இந்த நிகழ்வு’ அப்படி இல்லை.  

நனவில் நடப்பதற்கும் இந்த நிகழ்வுக்கும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.

இது கனவு இல்லை நிஜம் தான் என தோன்றியது

பயம் இறுக்கியது.

'27 மே என் எக்ஸ்பைரி டேட்... ஆனால் வருடம் சரியாக ஞாபகம் வரவில்லை.  மண்டையை கசக்கி பார்த்தும் ஞாபகம் வரவில்லை.

இப்படித்தான்விழித்ததும் சில கனவுகள் முழுமையாக நினைவில் வருவதில்லை. ஆனால்சிலக் கனவுகள் விழித்து சில மணி நேரத்திலோ அந்த நாள் முடியும் முன்போ தெளிவு அடையும்.  அது போல, ‘எந்த வருடம் என்று இன்று விடை கிடைக்குமாஇருப்பு கொள்ளவில்லை நடேசனுக்கு.

நேரம் ஆக ஆக பயம் கூடுதலானது.

டேசனைப்  பற்றி கொஞ்சம் தெரிந்துக்  கொள்வோம். பிஎஸ்சி கணிதம் படித்தபின்,  வங்கி வேலை தான் வேண்டுமென்றுஅதுவும் பொதுத்துறை வங்கியில் தான் வேண்டுமென்றுபலக்  காலம் முயற்சி செய்து கடைசியில் வாங்கிவிட்டார். 

அலுவலகத்தில் தனக்கு வரையறுக்கப்பட்ட வேலைகளை மட்டும் செய்வார் - அதற்கு மேல் ஒரு துரும்பை கூட தொடமாட்டார்.  யாருடனும் சுமுகம் கிடையாதுஎங்கேச் சகஜமாக பேசினால் கூடுதல் வேலை வந்து விடும் என்ற எண்ணம்.  இதற்காக முகத்தில் எப்போதும் சிடுசிடுப்பு என்ற அரண் - பேச்சில் ஒரு கடுகடுப்பு - மொத்தத்தில். கிடைத்தது சிசி (சிடுசிடுப்புவின் சுருக்கம்) என்ற பட்டப் பெயர்.

ஏறக்குறைய அதே சிடுசிடுப்பு வீட்டில் மனைவியிடமும், ஒத்த பையன் சித்து என்ற சித்தார்த்திடமும்.  இதற்காகவே சித்து இவரை அவ்வப்போது கலாய்ப்பது உண்டு.  அலுவலகத்தில் அப்பாவின் பட்டப் பெயரான சிசி,  இரண்டு கைகள்  (வாய்கள்?) மாறி, ஒரு நாள் சித்தார்த் இடம் வந்து சேர்ந்தது. அதை அம்மாவிடம் சொன்னான். அவர்களுக்கு இதில் வியப்பு ஏதும் இல்லை. மனுஷன் வெளியிலும் இப்படித்தான் என உறுதி ஆனது.

சித்தார்த் எம்எஸ் படிக்க போன வருடம் அமெரிக்கா போன பின் அப்பா மகனுடனான இடையே ஆன நேரடி லடாய் நிறுத்தம் ஆனது - போனில் சில சமயங்களில் உண்டு.

குறித்தத் தேதியான மே 27 நடேசன் நினைவில் வந்து போனது. ஆனால் 'எந்த வருடம்?' என்று இன்னும் ஞாபகம் வரவில்லை.  

அதே சமயம் இன்றையத் தேதியை பார்த்தபோது துணுக்குற்றான் நடேசன்.

இன்னைக்கு தேதி மே 28அடகவனிக்கவே இல்லையே!’. 

அப்போஎந்த வருடமாக இருக்கும்?

2022 என்றால், இன்னும் ஒரு வருடம் இருக்கு.

அதற்குள் செய்ய வேண்டிய கடமைகள் மனதில் வந்து ஓடியது.

சித்துவுக்கு கல்யாணம் செய்யவேண்டும்.

முடிக்கவேண்டிய காரியங்களை லிஸ்ட் போடவேண்டும்”.

லைப் இன்சூரன்ஸ் பாலிசி வேலைக்குச் சேர்ந்தபோதுப்  போட்டது, இருபத்தி ஆறு வருடங்களுக்கு முன்பாலிசி அமௌன்ட் எட்டு லட்சம் என்று ஞாபகம். இப்போ நினைத்தால் சொற்பமாக தெரிந்தது. இதை அதிக படுத்த முடியுமா என பார்க்கணும்”.

பேங்க் அக்கௌன்ட் மனைவியுடன் ஜாயிண்ட் தான்அதில் பிரச்சினை இல்லை .

கொஞ்சம் மியுச்சுவல் பண்ட், ஷேர்ஸ் உண்டு. நாமினேஷன் போட்டாச்சா என்று பார்க்கணும் .

அசையா சொத்துக்கள்இந்த அபர்ட்மென்ட் மற்றும் ஊரில் ஒரு பழைய வீடும்

எதுக்கும் ஒரு உயில் எழுதிவிட்டால் சகல சொத்துக்களும் சிரமம் இல்லாமல் செட்டில் ஆகிவிடுமோ?”

அட்வாகேட் ஆன தன் பள்ளி நண்பன் சம்பத் இடம் கேட்கவேண்டும்”,

இப்படி தாறுமாறாக எண்ணங்கள் வந்தோடின.

இது மட்டுமல்லாமல், நடேசன் மனதில் தத்துவ சிந்தனைகளும் உதித்தன. 

வாழ்க்கையில் இதுவரைத் தான் சாதித்தது என்ன?”

மறைவுக்கு பின் தான் விட்டுப்போகும் லேகசிநன்நினைவுகள் என்ன?”

தான் மற்றவர்களிடம் நடந்துக் கொண்ட முறைகளை எடை போட தொடங்கினான்.

தான் இல்லாமல் தன்னை சார்ந்தோர் பரிதவிப்பார்களா?”.

ஒரு வேளை எல்லோரும் நிம்மதி அடைவார்களோ”, என்ற நினைப்பு மனதை பாரமாக்கியது.

மையல் அறையிலிருந்து நடேசனின் மனைவி நடந்து வரும் சப்தம் கேட்டது.

"பயத்தைக் காட்டி கொள்ளவேண்டாம்'', என நடேசன் தனக்குள் முடிவு எடுத்தான்.

சுகுணா குடுத்த காபியை குடித்தான்.

"காபி ரொம்ப நல்லா இருக்கு"என மென்மையாக சொன்னான்.

தினமும்காபியில், "டிகாட்ச்சின் கம்மி",

"சக்கரை ஜாஸ்திபாயசம் போல இருக்கு",

"சூடு போரலே",

"பால் தீஞ்சு போச்சோ"என ஏதாவது ஒரு குத்தம் கேட்டு பழக்க பட்டதால், 'இன்னைக்கு என்ன ஆச்சு இந்த மனுஷனுக்குஎன சந்தேகப்  பார்வையுடன் பார்த்தாள் சுகுணா.

காபிக்கு பின்வழக்கம் போல பால்கனியில் உள்ள செடி தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றினான் நடேசன்.

இந்த அபார்ட்மெண்ட் வாங்கிய புதிதில்வைத்த செடிகள்.  தினமும் எந்திரமயமாக தண்ணீர் ஊற்றிய நடேசனுக்கு,  இன்று தண்ணீர் ஊற்றும் போது உயிர்களுக்கு உயிர் ஊட்டுவது போல புதியதாக உணர்வு ஏற்பட்டது. செடிகளின் இலைகளை செல்லமாக தடவினான். அழுக்கு படிந்த சில இலைகளை துடைத்தான்.

வரவேற்பறை அலமாரியில் உள்ளப்  புத்தகங்களை நேர்த்தியாக வரிசை படுத்தினான்.

காபி டம்பளரை எடுக்கவந்த சுகுணா இதை தற்செயலாக பார்த்தாள். நடேசனின் ஒவ்வொரு நடவடிக்கையும் இன்று வித்தியாசமாக இருப்பதை கவனித்தாள்நாள் முழுக்க கவனிக்கவும் செய்தாள்.

குளித்து விட்டுபூஜை அறைக்கு போனான் நடேசன். இன்னைக்கு விளக்கு ஏற்ற வேண்டும் எனத் தோன்றியது. எண்ணை இருந்தது. திரியை காணோம்.

"சுகுணா இந்த திரி எங்கே?" என மனைவியிடம் கேட்டான் .

'என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு என்ன புதுசா விளக்கு ஏத்துரார்', என ஆச்சார்யபட்டுக் கொண்டே,

அந்த ரெண்டாவது டிராயரில் வலது பக்கத்தில்"என துல்லியமாக சொன்னாள் சுகுணா.

விளக்கேற்றி கும்பிட்டான்.

மனம் வருட-விடையை தேடியது. இன்னமும் அவ்விடை கிட்டவில்லை

காலை உணவுக்காக நடேசன் அமரும்போதுசுகுணா,

"மாவு ஆட்டியிருக்கேன்அது இன்னும் சரியா புளிக்கலே,  அதனால் உப்புமா செஞ்சு இருக்கிறேன்" என்று தயக்கத்துடன் சொன்னாள்.

"இல்லேஓட்ஸ் கஞ்சி செய்யட்டுமா?" என கேட்டாள்.

"அதனால் என்ன. உப்புமாவே இருக்கட்டும்" என்று நடேசன் அமைதியாகநிதானமாகஒப்புதல் அளித்தான்.

எரிச்சலுடனான பதிலையே எப்போதும் எதிர் கொள்ளும் சுகணாவுக்கு இதுப் பரிச்சியமில்லாத இதமளித்தது.

சிறியக் குற்ற உணர்ச்சி ஏற்பட்டதோ என்னோவோ, சுகுணா, "லஞ்சுக்கு மீன் வறுக்கட்டுமாநெய் மீன் இருக்கு"என்று உபசரித்தாள்.

"இல்லை இல்லை ...நான்-வெஜ் வேணாம் இன்னைக்கு ...", சற்றே வேகமாக முணுமுணுத்தான் நடேசன்.

"இன்னைக்கா", "இனிமேலா"என தெளிவாகக் கேட்கவில்லை சுகுணாவுக்கு.

மனுஷன் ஏதோக் தீர்க சிந்தனையில் இருப்பது தெரிந்தது. பிறகுசரியானச் சந்தர்ப்பதில் கேட்கலாம் என அமைதி ஆனாள்.

நடேசன் மீதான சுகுணாவின் உன்னிப்பான கவனம் தொடர்ந்தது.

அதே சமயம்மீண்டும் மீண்டும் நினைவை தோண்டிய நடேசனுக்கு வருட’ கேள்விக்கு விடை கிட்டவில்லை.

ந்த லாக்டௌனில் நடேசனுக்கு வீட்டிலிருந்து தான் வேலை. வங்கியில் சேர்ந்ததில் இருந்து சென்னை சேப்பாக்திருவண்ணாமலைநெல்லை  மற்றும் கடைசியாக நாக்பூர் என்று நான்குக் கிளைகளில் வேலை செய்தாச்சு. இப்போ பின்புல அலுவலகத்தில் (பேக் ஆஃபிஸில்) வேலை வாடிக்கையாளர் தொல்லையை தவிர்க்கவே இந்த பின்புல அலுவலகத்து வேலையை கையக படுத்தி கொண்டான் நடேசன்ப்ரொஜெக்ட்ஸ் பிரிவில் நடேசன் ஒரு மேலாளர் (மேனேஜர்). எல்லா சம்பந்த பட்ட பிரிவு ஆட்களை விரட்டிப்ரொஜெக்ட்களை உரிய நேரத்தில் முடிக்கவேண்டும்.  மடிக்கணனி (லேப்டாப்), கைபேசிதொலைபேசிஇப்போ ஜூம் போன்ற சகல தொலை தொடர்பு கருவிகளின் மூலம் தான் வேலை. 

நடேசன் வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்யும் நாட்களில் சுகுணா கவனித்த மட்டில்,  அவ்வப்போது நடேசன் குரலை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்தது - இது நடேசனின் வழக்கமான தன்மை தான். இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை சுகுணாவுக்கு.  ஆனால் இன்றோ மனுஷன் ரொம்ப மென்மையாக பேசி சமாளித்து வேலை வாங்குவது பார்க்க வித்தியாசமாக இருந்தது.

இன்று இரவு சித்துவுடன் பேசும் போதுஇவரின் இந்த மாற்றத்தைப் பற்றி சொல்லவேண்டும் என தீர்மானித்தாள். நம்ம நேரம்  நம்ம இரவு 8:30 மணிக்கு போன் செய்வது வழக்கம். அது சித்துவுக்கு உகந்த நேரம்.

இரவு உணவை நடேசனுக்கு பரிமாறினாள் சுகுணா. அமைதியாக சாப்பிட்ட நடேசன்விடையை இன்னமும் தேடி கொண்டிருந்தான். விடை கிடைத்த பாடு  இல்லை.

தானும் இரவு உணவை முடித்துவிட்டு சித்துவுக்கு  போன் செய்ய காத்திருந்தாள் சுகுணா.

ரவு 8:30 மணி ஆச்சு. படுக்கை அறையில் இருந்து சித்துவுக்கு போன் செய்தாள் சுகுணா.

"ஹலோ அம்மா எப்படி இருக்கே?" 

"நல்லா இருக்கேன் சித்து.  சாப்பிட்டேயா?" அம்மாக்களுக்கே உரிய கரிசனத்துடன் கேட்டாள்.

"அம்மாஇப்பதான் எழுந்திருச்சேன். இனிமேதான் சாப்பிடணும். உங்க ரெண்டு பேருக்கும் வாக்ஸின் செகண்ட் டோஸ் எப்போ அம்மா?"

"அடுத்த வியாழன்… அது இருக்கட்டும் ... சித்து நான் சொல்றதை கவனமா கேளு. உன் அப்பா இன்னைக்கு ..." என்று ஆரம்பித்துபெட் காபி முதல்காலை டிபன் மற்றும் அலுவலக சம்பாஷணைகளில் போது அமைதியாக, நிதானமாக நடேசன் நடந்து கொண்டதை விலா வரியாக சொன்னாள்.

இதனிடையே நடேசனுக்கும் மகன் சித்துவுடன் பேச வேண்டும் என் தோன்றியது.

"என்ன சித்து கூடவா பேசிகிட்டு இருக்கே. நானும் பேசணும்" என்று வாஞ்சையுடன் கேட்டுக்கொண்டே வரவேற்பு அறையில் இருந்து படுக்கை அறைக்கு நகர்ந்தான் நடேசன்

 

மகனிடம் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்த சுகணாவுக்கு நடேசன் பேசியது காதில் விழவில்லை. நடேசன் படுக்கை அறையை நெருங்கி விட்டதையும் உணரவில்லை

 

நடேசனின் மாபெரும் மாற்றத்தைப் பற்றிய தன் எண்ணத்தைசுகுணா ஒரு வரி தீர்மானமாகமுடிவுரையாகசொல்லிக்கொண்டு இருந்த சமயம் அது.

 

“…சித்து .. அப்பாவின் இன்றைய சாந்தமான அவதாரத்தை பாக்கும்போதுமனுஷன் இன்னைக்கு புதுசா பிறந்து வந்து இருக்கிறாரோனு தோணுது".  


அதற்குள் படுக்கை அறையை எட்டிய நடேசனுக்கு இந்த முடிவுரை தெளிவாக  கேட்டது.


அதோடு நடேசன் விடை(யும்) பெற்றான்.


- ராகி   💗


என்கிற ராதா கிருஷ்ணன்

©

Comments

  1. Nice story Raki. If the human expiry dates were published, humans will be more humane?!!! There could be other type of reactions as well? May be matter for another story!!

    ReplyDelete
  2. சாகுற நாள் தெரிஞ்சா
    வாழுற நாள் நிம்மதியா இருக்காது.... நல்ல கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள்.. நல்ல நடை..

    ReplyDelete
  3. சாகுற நாள் தெரிஞ்சா
    வாழுற நாள் நிம்மதியா இருக்காது.... நல்ல கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள்.. நல்ல நடை..

    ReplyDelete
  4. ராகி.... என்ன தெளிவா நடேசனை தெளிய வைச்சிட்ட. Super, நடேசனோட மண்டை குடைச்சலை வாசகர்கள் ஆன எங்களையும் சேர்த்து புரிய வைச்சு விதம், very nice.

    ReplyDelete
  5. *Raki*, this is a very nice story & absolutely relatable in a personal level by everyone, if one reflects on oneself. The writing flows like the flow of a river ( la Thiru Vi Ka style). Characterisations are superbly dealt with. Especially, the bank official Natesan stares at you with his inimitable nature - doing strictly what he would like to do, building an isolation fortress around him to avoid any little extra work etc. etc. All in all this is a complete little story - some suspense, different characters with their individualities clearly brought out , a happy ending leaving a thought with readers to relect on. Your each blog is shining better than the previous one. Wish you can make a short film on this. ������

    ReplyDelete
    Replies
    1. Thank you Sridhar for your elaborate review comments.

      Delete
  6. The question marks at the end may be ignored. It was supposed to be a thumbs up.

    ReplyDelete
  7. Pl ignore question marks, it is supposed to be a thumbs up.

    ReplyDelete
  8. Very well written Radha! How a man’s outlook changes once the expiry date is known!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படம் எடுத்தப் பாடம் !

சேரும் சேறு !

மரணத்தின் விளிம்பில் !