விபத்துகளும் கமல்ஹாசன்களும்
விபத்துகளும் கமல்ஹாசன்களும்
சுபஸ்ரீ பேனர் சம்பந்தபட்ட விபத்தில் இறந்ததும், ஆழ்குழாய் விபத்தில் குழந்தை வில்சன் இறந்ததும், சமீபத்தில் இந்தியன் 2 படபிடடிப்பில் கிரேன் விபத்தில் மூவர் இறந்ததும் மிகவும் வருத்தமான நிகழ்வுகள்.
இந்த விபத்துகளிலிருந்து
நாம் பாடங்கள் கற்றோமா? அவைகள் மீண்டும் ஏற்படா வண்ணம் என்னென்ன செய்ய வேண்டுமென கண்டுபிடித்தோமா? அவைகளை செய்தோமா?
'ஆம்' என்று உறுதியாக சொல்ல நம் மனம் தயங்குவதேன்?
கிரேன் விபத்துக்கு வருவோம்.
கமல் மற்றும் பலரும் அதீத அனுதாபம் தெரிவித்தனர்.
ஆனால், ஒரு சில தினங்களிலே கமல் அவர்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் எழுதி பிரச்சினையை அவர்கள்
வாசலில் வைத்துவிடுகிறார். தயாரிப்பு நிறுவனவும் பதில் கடிதம் எழுதிவிட்டார்கள். எது சரியான அணுகுமுறை?
உடனடி நிவாரணங்கள் ஏற்பாடு
செய்தபின், இந்த
மாதிரியான விபத்துகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே! விபத்துகளை தொலை நோக்குடன், முறையாக எப்படி
கையாள்வது?
விபத்துகளை சிறப்பாக மேலாண்மை
செய்ய, மூன்று
கட்ட நடவடிக்கைகள் தேவை:
1. மீட்பு / உடனடி நடவடிக்கைகள் (Corrective
Measures):
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதல் உதவியும்,
தகுந்த சிகிச்சையும் அளிக்கபட வேண்டும்.
ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடு செய்யவேண்டும். இது எல்லோரும் அறிந்தததே; உடனடி நடவடிக்கைகள் பெரும்பாலும் ஒரு அளவுக்கு
சிறப்பாகவே நடைபெறுகின்றன. இதில் அவ்வளவு ஆக குறைகள் இல்லை.
நாம் எங்கே, எதில் தவற வாய்ப்பு அதிகம்? 'அதே' மாதிரியான விபத்து மீண்டும் ஏற்படாமல்
தடுக்க தவறுகிறோம். விபத்துக்களின் அறுதி
காரணங்களை கண்டுபிடிப்பதிலும் அவைகளை நிவர்த்தி செய்வதிலும்
தவறுகிறோம்! குழந்தை வில்சனுக்கு
முன், கடந்த 15 ஆண்டுகளில் 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள், தமிழ்நாட்டில் நடந்த ஆழ்குழாய் விபத்துகளில் இறந்தது நம்மில் எவ்வளவு பேருக்கு நினைவிருக்கும்?
2.
ஆய்வு:
சம்பந்த பட்ட துறை, மற்றும் பாதுகாப்பு
துறை சார்ந்த வல்லுநர்கள் கொண்ட குழு விபத்தை பற்றி முழு ஆய்வு நடத்த வேண்டும். விபத்துக்கான
காரணங்கள் என்னென்ன, காரணங்களுக்கான அறுதி காரணங்கள்
என்ன, யார் மற்றும் எவை காரணம் என கண்டறியபட வேண்டும்.
அது என்ன அறுதி காரணங்கள் (Root causes) ?
கிரேன் விபத்து, ஓட்டுனரின் கவனக்குறைவால் ஏற்பட்டது
என்றால், அந்த காரணத்துக்கான அறுதி காரணம் என்னவென்று
கண்டுபிடிக்க வேண்டாம். ஓட்டுனரே அறுதி காரணமாக
இருக்கலாம் அல்ல்து ஒருவேளை, ஒட்டினருக்கு ஓய்வு
அளிக்காமல் பல மணி நேரம் வேலை வாங்கியது காரணமாக இருக்கலாம். அப்படியிருக்கும்
பட்சத்தில், ஒட்டினருக்கு ஓய்வு அளிக்காத அதிகாரியும்
காரணி ஆகிறார்.
ஆய்வு முடிவில், காரணங்கள், அவற்றின் அறுதி காரணங்கள், யார் காரணம், எவை காரணம் என்பவை பட்டியல் செய்ய
படவேண்டும்.
காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள்
பரிந்துரைக்கப்பட வேண்டும்; விபத்து மீண்டும் ஏற்படாமல் இருக்க, அறுதி காரணங்களை நிவர்த்தி செய்ய என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க
பட வேண்டும் என்பவை பரிந்துரைக்கப்பட வேண்டும்.
இவையெல்லாம் செய்துமுடிக்க ஒவ்வொரு
நடவடிக்கைக்கும் ஒரு உரிமையாளரை (owner) நியமிக்க வேண்டும்.
3.
தற்காப்பு / நிவர்த்தி நடவடிக்கைகள் (Preventive Measures):
மேற்படி பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்கு (காரணமானவர்கள் மீது), மற்றும் தற்காப்பு / நிவர்த்தி நடவடிக்கைகள் உரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். இதனால் விபத்துகளுக்கு உடனடி
நிவாரணங்களும், அதே
மாதிரியான விபத்து மீண்டும் ஏற்படாமலும் தடுக்க முடியும்.
இப்படி முறையாக கையாள்வதே
சரியான தீர்வு அல்லவா?
அதைவிடுத்து, அரசியல் ஆதாயம்
தேடுவதிலும், 'நீதான் காரணம்' என்ற
பரஸ்பர கடித போர்களிலாலும் டிவி
விவாதங்கள் வேண்டுமானால் சூடு பிடிக்கலாம், ஆனால்
விபத்து சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது!
- ராகி
©
💌



Well said.....this is the basic problem in India...problem is not analysed and corrected...blaming each other is only happening...
ReplyDeleteஇங்கு இப்படியே பழகிவிட்டது. நல்ல மாற்றத்திற்க்கு யாரும் தயாராக இல்லை.
ReplyDelete