படம் எடுத்தப் பாடம் !
படம் எடுத்தப் பாடம் ! வேளச்சேரி வட்டம் வெள்ளக்காடு ஆச்சு ! அடையாறுப் பகுதியோ அடைமழையில் மூழ்கியாச்சு ! கொளத்தூர் வீதியெல்லாம் குளம், குளமாச்சு ! மடிப்பாக்கம் மக்கள் மாடி ஏறியாச்சு ! சென்னை வெள்ளப் பெருக்கு மீண்டும் தலைப்பாச்சு ! ஈரமாக வந்தத் தினத்தந்தியை, ஓரமாகப் பிரித்தேன். தந்தியெங்கும் புகைப்படங்கள் - 'முந்திக் குதித்தத் தலைவர்கள், சந்து புந்து எங்கும் இந்த வெள்ளப் பணியின் அதிஅவசர மேற்பார்வையில்!' எக்கச்சக்கப் படங்கள் எடுத்தது, பக்கம்பக்கமாகப் பாடம், உழைப்பைப் பற்றி, ஆம், கடும் உழைப்பைப் பற்றி! கூர்ந்துப் பார்த்த நான், அசந்துதான் போனேன் ! அசாத்திய உழைப்பு இது. அசுத்த வெள்ளக் கழிவு நீரில் மொத்தெனக் குதித்து நின்று, முழங்கால் வரை மூழ்கி, முழுமூச்சாகக் கடமையை முழுமையாக ஆற்றியிருந்தனர், கூப்பிடக்குரலுக்கு ஓடோடி வந்த இப்புகைப்படக் கலைஞர்கள்! -ரா கி (ராதாகிருஷ்ணன்) 30 அக்டோபர் 2025

Very interesting jokes. This is how a magazine should be. Along with serious articles these kind of lighter titbits will make reading more interesting. Thanks
ReplyDelete1st editions content is good... Each one article from global & local along with one joke. Good start.
ReplyDeleteநல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
ReplyDelete"மனசாட்சியின் உறுத்தல்..." தலைப்பு அருமை !!!
ReplyDelete