கொரோனா - நாய் விற்ற காசு கடித்தது


கொரோனா - நாய் விற்ற காசு கடித்தது

"லகம் பிறந்தது எனக்காகஓடும் நதிகளும் எனக்காகமலர்கள் மலர்வது எனக்காக; ..."  என்ற கண்ணதாசனின் வரிகளின் பொருள் என்ன?

அன்பு’, ‘பாசம்’, ‘அரவணைப்பு’ போன்ற நற் குணங்களை இந்த வரிகள் காட்டுகின்றன என அவசரப்பட்டு சொல்வதுற்குள் சற்று பொறுங்கள்.

இந்த வரிகளின் பொருள்இதை யார் பாடுகிறார்கள் என்பதை பொருத்ததுசுருக்கமாகஅவர் கதாநாயகனா அல்லது வில்லனா என்பது முக்கியம்.

இந்த வரிகளை,  "அன்பு", "பாசம்", "அரவணைப்பு" என்ற குணங்களுடன் கதாநாயகன் பாடலாம்.  இதையே,  "பேராசை" , "ஆக்கிரமிப்பு", "சுயநலம்"குணங்களை கொண்ட வில்லன் பாடினால்,  இதன் பொருள் மாறுபடும் அல்லவா

"எல்லாம் எனக்கே" என்ற சுயநல மனிதர்களும்நாடுகளும் பொறுப்பு இல்லாமல் மற்ற உயிரினங்கள் இயற்கையை அளவுக்கு அதிகமாக சீண்டிவிட்டனர். விளைவுஇன்று கொரோனா என்ற மகா உலக யுத்தம்!



விலங்குகளிடம் மட்டுமே தங்கியிருந்த இந்த நுண்ணுணி இப்போது  மனிதனின் உடலுக்குள்  குடியேறியுள்ளது. இது ஒன்றும் புதிய வரவு அல்ல; சில பல காலங்களாகவே இது போன்ற நுண்ணுணிகள் மனிதனின் உடலுக்குள் புலம் பெயர்த்துள்ளன.

இந்த நுண்ணுணிகள் விலங்குகளை விட்டு மனிதனின் உடலுக்குள் புலம் பெயர காரணங்கள் என்ன?

1969 ல் லாசா (Lassa) என்ற நோய் நைஜீரியா வில் காணப்பட்டது.  அதற்குப்பின் ஏற்பட்ட தொற்று நோய்களான, எபோலா (Ebola) , சார்ஸ் (SARS),  மெர்ஸ் (MERS), பறவை நோய், என்பவை உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

இவைகளில் 2002ல்  சீனாவில் உருவான சார்ஸ், 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பல உயிர்களை பலிவாங்கியது. பல நாடுகளில், பல ஆண்டுகளாக இப்படிப்பட்ட தொற்று நோய்களுக்கான காரணங்களை கண்டறிய  ஆராய்ச்சிகள்1, 2, 3 நடந்தன. அவைகள் சொல்லுவது என்ன?

  • சமீப காலங்களில் உண்டான / பரவிய  75% தொற்று வியாதிகள் விலங்குகளில் இருந்து மனிதனுக்கு வந்தவையே3.
  • கொரோனா வைரஸ்க்கு காரணமான வுஹான் போன்ற நகரங்களில் உள்ள வெளவால், எலி இனம், நாய்கள், முதலைகள், நரிகள், தேள்கள், அணில்கள், ஆமைகள்  மற்றும்  அரிய விலங்குகள்  உயிருடன் மாமிசத்திற்க்காக விற்கப்படுவது.
  • கட்டுப்பாடு அற்ற பொருளாதார வளர்ச்சிக்காக, குடியிருப்புகள், சாலைகள், அணைகள் கட்டுவதற்காக,  காடுகள், மலைகள் அழிப்பதால் மனிதனுக்கும் மற்ற உயிர்யினங்களுக்கும் ஏற்பட்ட நெருக்கம். இதனால் இதுவரை இந்த உயிரினங்களுக்குள், ஒரு கட்டுக்குள், குடியிருந்த நுண்ணுணிகள் மனிதனுக்குள் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது.
  • மேலும், இந்த  ஆக்கிரமிப்பால்  பிற உயிரினங்கள் ஒதுங்கி போன பின், எலி மற்றும் வெளவால் இனங்கள் தங்கிவிடுகின்றன; அவைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நெருக்கம் தொடர்கிறது - அவைகளே கொரோனா  போன்ற நுண்ணுணிகள் மனிதனிடம் தொற்ற முக்கிய  காரணம்.
  • மக்கள் காட்டு மரங்களை வெட்டுவதும், காட்டு விலங்குகளை பிடித்து கூட்டில் அடைத்து விற்பதும் பெரும் வர்த்தகம் ஆகிவிட்டது.
மொத்தத்தில், சீராக, ஒரு கட்டுக்குள், அமைந்துள்ள  சுற்றுச்சூழல் அமைப்பு (ecosytem), விலங்கினங்கள், மற்றும் அவைகளின் வாழ்விடங்களை (habitat), பொறுப்பற்றவர்கள் குலுக்கிய குலுக்கலுக்கான பரிசே கொரோனா  வைரஸ் போன்ற தொற்று நோய்.

ப்பொது வந்துள்ள கொரோனா வைரஸ்க்கு என்ன மருந்து? இதற்கு இப்போதைக்கு மருந்து எதுவும் கிடையாது என்கின்றன ஜான் ஹாப்கின்ஸ் (John Hopkins)  போன்ற  பிரதம மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள். கொரோனா வைரஸ் வந்த பின் அளிக்க வேண்டிய மருந்தையும், வராமல் தடுக்க, தடுப்பு  மருந்தையும் கண்டுபிடிக்க பல  ஆராய்ச்சி நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இது முழுமையாக  கண்டுபிடிக்க பல மாதங்கள் or ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என்று தெரிகிறது.

கொரோனா வைரஸ் வந்த பலர் குணமடைந்துவிட்டார்கள் என சொல்கிறார்களே. அது எப்படி?4  கொரோனா வைரஸ் வந்தவர்களில் 80% பேருக்கு அதன் தாக்கம் குறைவாகவே இருக்கிறது.  இவர்களுக்கு, அவரவர்களின் அறிகுறிகள் (symptoms) படி மருத்துவர்கள் தற்போதுள்ள மருந்துகள் தந்து குணமாக்குகிறார்கள்.  தாக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு பல வித மருத்துகளை கொடுத்து பார்த்து குணபடுத்த முயற்சி செய்கிறார்கள்.

இன்றைய நிலையில், கொரோனா வைரஸ் வரலாமல் தடுப்பது மிக முக்கியம்.  அதற்கு, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு  கழுவுவது; மற்றவருடன் விலகி இருப்பது; வெளியே வராமல் வீட்டில் இருப்பது அத்தியாவசியம்.

தடுப்பு / மருந்து உடனடியா வராது என்றால் இந்த கொரோனா வைரஸ் எப்போது தான் ஒழியும்?4

இது  போன்ற தொற்று நோய்கள், மந்தை தடுப்பு சக்தி (herd immunity) உண்டான பின் மறையலாம்.  மந்தை தடுப்பு சக்தி என்பது மக்களில் 60 - 70% பேருக்கு இந்த வைரஸ் பரவி அவர்களுள் தடுப்பு சக்தி உருவான பின் வைரஸ் பின் தங்கிவிடுமாம்.  கேட்கவே பகிர் என்கிறது; மந்தை தடுப்பு சக்தி உண்டாக  60 - 70% பேருக்கு இந்த வைரஸ் பரவ வேண்டுமா!

சற்று நம்பிக்கை அளிக்கும் மற்றுமொரு சாத்தியக்கூறு என்னவென்றால், கொரோனா வைரஸ் நம்ம ஊர்  கோடை வெய்யிலை தாங்காது என்ற யூகம். முன்பு வந்த தொற்றுகள்  கோடை வெய்யிலால் குறைந்தன.  ஆனால் இப்போதைக்கு இது ஒரு யுகம் மட்டுமே.

மொத்தத்தில், தீர்க்கமான தீர்வு இப்போதைக்கு இல்லை; காலமே பதில் சொல்லும் - அது காலனாக இல்லாமல் இருக்கட்டும்!

அதுவரை, முன்பு சொன்னாற்போல, வைரஸ் வராமல் ஒவ்வொருவரும் தடுத்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து மக்கள் எல்லோருக்கும்  பரிசோனைகள் செய்து, தொற்று வந்தவர்களை தனிமை படுத்தி பரவலை தடுக்கவேண்டும்; தொற்று வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

ருங்காலத்தில் இதுபோல் தொற்று வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விட, என்ன செய்யக்கூடாது என்பது மிக முக்கியம். பொறுப்பற்ற மனிதர்களும், நாடுகளும் மனம் மாறி, மற்ற விலங்குகள் & இயற்கையோடு இணைந்து வாழவேண்டும். அவர்கள் தங்கள் தேவைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தொற்று நோயைகளை ஆராய்ச்சி செய்தவர்கள்3 சொன்னதை  நினைவில் கொள்வோம்:

"தொற்று வைரஸ்களுக்கு வளமான இருப்பிடமான வெளவாலும், அரிய விசித்திர விலங்குகளை நுகரும் சீன மக்களின் பழக்கமும், தொற்று நோய்களுக்கான டிக் டிக் வெடிகுண்டுகள்".

அதிர்ச்சியும் அதிர்ஷ்டமும் கலந்த தகவல்களை பேராசிரியர் யென்ரு கானிங்ஹம்2 (Andrew  Cunningham), சொல்கிறார், அதையும் கேட்போம்:

"முன்பு வந்த Ebola வைரஸ்ஆல், நோய் வந்த 50 % பேர் இறந்தனர்; Nipah வைரஸ், நோய் வந்த 60 – 70 % பேரை காவு வாங்கியது.  ஆனால், இந்த முறை பகடைக்காய் உருட்டலில்,  வீரியும் குறைந்த COVID 19 தான் வந்திருக்கு.  இந்த முறை மக்கள் சற்று அதிர்ஷ்டசாலிகள்தான்!

இந்த நிகழ்வால் இயற்கை நமக்கு ஒரு செய்தியை, ஒரு எச்சரிக்கையை தருகிறது. அதை உதாசீனம் செய்துவிட்டு, இது இப்படிதான் என்று இருந்தால், மீண்டும் ஒரு புதிய வைரஸ் கண்டிப்பாக பரவும்; அதுவும் அதிக வீரியத்துடன் வரலாம்!”

அதையே, நம் தமிழ் சினிமா பாணியில் சுருக்..’என சொன்னால், "கண்ணா, இது சும்மா  ட்ரைலர் தான். .." என்று வரும்.

இன்று நாய் விற்ற காசு கடித்தது; நாளை குதறிவிடுமோ?

ராகி 
©
💌

Sources:

1.  Scientific American – ‘Destroyed Habitat Creates the Perfect Conditions for Coronavirus to Emerge COVID-19 may be just the beginning of mass pandemics’- By John VidalEnsia on March 18, 2020.

2.   The Guardian – ‘Coronavirus: 'Nature is sending us a message’, says UN Environment Chief, Damian Carrington, Environment Editor ,Wed 25 Mar 2020 07.00 GMT.

3.  Clinical Microbiology Reviews, Oct. 2007, p. 660–694 Severe Acute Respiratory Syndrome Coronavirus as an Agent of Emerging and Reemerging Infection; Vincent C. C. Cheng, Susanna K. P. Lau, Patrick C. Y. Woo, and Kwok Yung Yuen* State Key Laboratory of Emerging Infectious Diseases, Department of Microbiology, Research Centre of Infection and Immunology, The University of Hong Kong, Hong Kong Special Administrative Region, China.

4.   Bloomberg: When, and How, Does the Coronavirus Pandemic End? By James Paton 3 April 2020, 20:16 GMT+4.

5.    Photograph Credit: International Business Times - Chinese markets selling bats and other exotic  wild animals reopen amid Coronavirus pandemic - By Manthan Chheda March 31, 2020 14:04 +08.

Comments

  1. உண்மை சுடத் தான் செய்யும் என்பதை அழகாக வெளிகொணர்ந்ததற்க்கு நன்றி

    ReplyDelete
  2. Uproot of many diseases are because of consuming animals...not this animal and that animal..it is better to avoid...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படம் எடுத்தப் பாடம் !

சேரும் சேறு !

மரணத்தின் விளிம்பில் !